“கேள்வியையும் அதற்கான பதிலையும் நீங்களே எழுதுங்கள்” – மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கோவா ஐஐடி | IIT Goa ask students to prepare their semester question paper on their own and answer for it and the initiative goes viral | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
வழக்கமாக தேர்வு என்றால் ஆசிரியர்கள் தயாரித்து கொடுக்கின்ற கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிப்பார்கள். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மாணவர்களையே தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்து, அதற்கான பதிலையும் எழுதிய சொல்லி உள்ளனர் கோவா ஐஐடி உயர்கல்வி கூட பேராசிரியர்கள்.
ANALOG CIRCUITS என்ற பாடத்திற்கான செமஸ்டர் தேர்வு வினத்தாளைதான் தயாரித்து, பதில் எழுத சொல்லி உள்ளனர் பேராசிரியர்கள். அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளது இரண்டு விஷயங்கள் தான். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் வகையில் இந்த செமஸ்டர் முழுவதும் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்டடி மெட்டீரியல்ஸை கொண்டு தயார் செய்து கொள்ளுங்கள். அதற்கான பதிலை இரண்டு மணி நேரங்களில் கொடுங்கள். இந்த பாடம் குறித்த புரிதல் உங்களுக்கு எந்த அளவிற்கு உள்ளது என...