Sunday, June 19

விளையாட்டு

பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கடைசி அணியாக கோஸ்டாரிகா தகுதி: 1-0 என நியூசிலாந்தை வீழ்த்தி நுழைந்தது
விளையாட்டு

பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கடைசி அணியாக கோஸ்டாரிகா தகுதி: 1-0 என நியூசிலாந்தை வீழ்த்தி நுழைந்தது

தோகா: 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நவம்பர் 21ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் கத்தார்  நேரடியாக தகுதி பெற்ற நிலையில் தகுதி சுற்று பிரேசில், பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்ச்சுகல், ஈரான் உள்பட 30 அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்று முன்தினம் தகுதி சுற்று ‘பிளே-ஆப்’ ஆட்டத்தில்  ஆஸ்திரேலியா பெனால்டி ஷூட்-அவுட்’டில் 5-4 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி 31வது அணியாக தகுதி பெற்றது. கடைசி அணிக்கான பிளே ஆப் ஆட்டத்தில் நேற்றிரவு  தோகாவில் கோஸ்டாரிகா-நியூசிலாந்து அணிகள் மோதின.  இதில் ஆட்டம் தொடங்கிய 3வதுநிமிடத்திலேயே கோஸ்டாரிகாவின் ஜோயல் கேம்ப்பெல் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். கடைசி வரை நியூசிலாந்தால்  கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா வெற...
இந்தியா விளையாடிய கால்பந்து போட்டி – ‘வந்தே மாதரம்’ என ஒருமித்த குரலில் முழக்கமிட்ட ரசிகர்கள் | fans chant vande mataram india soccer football asian cup qualifier match
விளையாட்டு

இந்தியா விளையாடிய கால்பந்து போட்டி – ‘வந்தே மாதரம்’ என ஒருமித்த குரலில் முழக்கமிட்ட ரசிகர்கள் | fans chant vande mataram india soccer football asian cup qualifier match

கொல்கத்தா: இந்தியா மற்றும் ஹாங்காங் கால்பந்தாட்ட அணிகள் விளையாடிய போட்டியில் ரசிகர்கள் 'வந்தே மாதரம்' என ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர். சமூக வலைதளத்தில் இந்தக் காட்சி கவனம் பெற்றுள்ளது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் (VYBK) மைதானத்தில் 2023 ஆசியக் கோப்பை தொடருக்கான மூன்றாவது தகுதிச் சுற்றுக்கான போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கிற்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இந்திய அணி. அதோடு அடுத்தடுத்த ஆசிய கோப்பைக்கான தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளது இந்தியா. இந்தத் தொடரில் ஐந்தாவது முறையாக பங்கேற்க இந்தியா தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்திய கால்பந்து அணியின் சிறந்த சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியை நேரில் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் மைதானத்தின் பார்வையாளர்களுக்கான மாடத்தில் இருந்தபடி 'வந்தே மாதரம்' என ஒர...
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியா வெற்றி
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியா வெற்றி

பல்லேகலே: இலங்கை-ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி பல்லேகலே மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 300ரன் எடுத்தது.அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் நாட்அவுட்டாக 86 (87 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிசாங்கா 56 , குணதிலகா  55, அசலங்கா , ஹசரன்கா தலா 37 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில், ஆஷ்டன் அகர், மார்னஸ் லாபுசாக்னே தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் டக்அவுட் ஆக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44(41பந்து) ரன் அடித்தார. 12.4ஓவரில் 2விக்கெட் இழப்பிற்கு 72ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின்னர் 44 ஓவரில் 282ரன் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கிய நிலையில் லாபுசாக்னே 24, ஸ்டீவன் ஸ்மித் 53, ஸ்டோனிஸ் 44, அலெக்ஸ் கேரி 21 ரன்னில் ஆட்டம் இழந்தனர். மேக்ஸ்வ...
Sanju Samson resumes cricket training | அயர்லாந்து தொடருக்கு தயாராகும் இளம் வீரர்? வாய்ப்பு கொடுக்குமா பிசிசிஐ
விளையாட்டு

Sanju Samson resumes cricket training | அயர்லாந்து தொடருக்கு தயாராகும் இளம் வீரர்? வாய்ப்பு கொடுக்குமா பிசிசிஐ

தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு இந்திய அணி, அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தலைமையிலான சீனியர் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதால், அயர்லாந்துக்கு எதிராக விளையாடுவதற்கு இளம் இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதற்கேற்ப, அந்த தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும் படிக்க | Team India IND vs SA: டிராவிட் கொடுத்த அட்வைஸ் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய இந்தியா ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சஞ்சுசாம்சன், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தொடர்ந்து புறக்கணிக்கபடுவதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ...
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: பேர்ஸ்டோ டி.20 ஆட்டத்தால் இங்கிலாந்து அபார வெற்றி
விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: பேர்ஸ்டோ டி.20 ஆட்டத்தால் இங்கிலாந்து அபார வெற்றி

நாட்டிங்காம்: இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையே 2வது டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 533, இங்கிலாந்து 539ரன் எடுத்தன. 14 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 4ம் நாள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 224ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று அந்த அணி 284 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதையடுத்து 299 ரன் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில், பேர்ஸ்டோ டி.20 போட்டி போல் அதிரடியாக ஆடினார். 77 பந்தில் சதம் அடித்த அவர் 92 பந்தில் 14 பவுண்டரி, 7 சிக்சருடன் 136 ரன் எடுத்து ஆவுட் ஆனார். 50 ஓவரில் 5விக்கெட் இழப்பிற்கு 299 ரன் எடுத்த இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 75ரன்னில் களத்தில் இருந்தார். பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார். ஏற்கனவே முதல் டெஸ்ட்டில் வென்றிருந்த இங்கிலாந்து 2-0 எ...
‘ஆனால் விதை நான் போட்டது’ – ஐபிஎல்லின் அபார வளர்ச்சி குறித்து லலித் மோடி ரியாக்‌ஷன் | lalit modi speaks about growth of ipl franchise cricket media rights new height
விளையாட்டு

‘ஆனால் விதை நான் போட்டது’ – ஐபிஎல்லின் அபார வளர்ச்சி குறித்து லலித் மோடி ரியாக்‌ஷன் | lalit modi speaks about growth of ipl franchise cricket media rights new height

புது டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் அபார வளர்ச்சி கண்டுள்ள இந்த வேளையில் அதற்கான விதையைப் போட்டது தானே என தெரிவித்துள்ளார் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி. ட்வீட் மூலம் இதனை தெரிவித்துள்ளார் அவர். 2023 முதல் 2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சி, டிஜிட்டல், பிரத்யேக போட்டிகள் மற்றும் வெளிநாடுகளில் ஒளிபரப்பு செய்யும் உரிமத்திற்கான ஏலத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தியது. இதில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.23,575 கோடிக்கும், டிஜிட்டல் உரிமத்தை வயாகாம் 18 நிறுவனம் ரூ.23,758 கோடிக்கும் பெற்றுள்ளன. இது தவிர வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமம் ரூ.1,057 கோடிக்கு பெறப்பட்டுள்ளது. ஒளிபரப்புக்கான ஒட்டுமொத்த விலை ரூ.48,390 கோடி. மலைக்க வைக்கும் இந்த விலையை குறித்து அறிந்தவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை சொல்லி வருகின்றனர். இதன் மூலம் உலகில் ...
Asia Cup 2022 Venue And Full Schedule | ஆசிய கோப்பை 2022 போட்டி அட்டவணை மற்றும் இடங்கள்
விளையாட்டு

Asia Cup 2022 Venue And Full Schedule | ஆசிய கோப்பை 2022 போட்டி அட்டவணை மற்றும் இடங்கள்

2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது.  கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆசிய கோப்பை 2022 போட்டிகள் நடைபெறுகிறது.  ஆசிய கோப்பை 2022ல் 6 ஆசிய அணிகள் விளையாடுகின்றன.  இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் போட்டிகள் நடைபெறும்.  இலங்கை அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பையை நடத்துகிறது.  ஆசிய கோப்பையின் 2020 பதிப்பை இலங்கை நடத்த வேண்டும், ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டு தற்போது 2022-ல் நடைபெற உள்ளது.  இது ஆசிய கோப்பை போட்டியின் 15வது பதிப்பாகும். மேலும் படிக்க | இந்திய அணியின் பயிற்சியாளரான VVS லக்ஷ்மண்!   இதுவரை இந்தியா 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது, இலங்கை 5 முறை வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் கடைசி பதிப்பு 2018-ல் T20 வடிவத்தில் விளையாடப்பட்டது. இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட...
This Bowler is the Key for Team India victory in 3 T20 | Team India IND vs SA: டிராவிட் கொடுத்த அட்வைஸ் – வெற்றிப்பாதைக்கு திரும்பிய இந்தியா
விளையாட்டு

This Bowler is the Key for Team India victory in 3 T20 | Team India IND vs SA: டிராவிட் கொடுத்த அட்வைஸ் – வெற்றிப்பாதைக்கு திரும்பிய இந்தியா

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவியதால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. இப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தால் இந்திய அணி 20 ஓவர் தொடரை இழந்திருக்க நேரிடும். ஆனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இதற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் கொடுத்த அட்வைஸ் காரணம் என சாஹல் தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க | முடிந்தது ஐபிஎல் ஏலம்.. ஒளிபரப்பு உரிமையை வாங்கிய புதிய நிறுவனம்! டிராவிட் அறிவுரை 3வது 20 ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் யுஸ்வேந்திர சாஹல். இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர்,  மிடில் ஆர்டரில் அந்த அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமா...
புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா: சாதனையுடன் ஒலிம்பிக் சீசனை தொடங்கி அசத்தல்..!
விளையாட்டு

புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா: சாதனையுடன் ஒலிம்பிக் சீசனை தொடங்கி அசத்தல்..!

ஹெல்சின்கி: பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த நீரஜ் சோப்ரா. இவர் பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு அவர் பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். இதில் 88.30 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்தார். கடந்த ஆண்டு பாட்டியாலாவில் நடைபெற்ற போட்டியில் 88.07 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா தேசிய அளவில் சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார். இதன் மூலம் இந்த ஒலிம்பிக் சீசனை வெள்ளிப்பதக்கத்துடன் நீரஜ் சோப்ரா தொடங்கியுள்ளார். இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரத்திற்கு பின்லாந்து வீரர் ஆலிவர் ஹெ...
ஈட்டி எறிதலில் சொந்த சாதனையை முறியடித்து நீரஜ் சோப்ரா அசத்தல்
விளையாட்டு

ஈட்டி எறிதலில் சொந்த சாதனையை முறியடித்து நீரஜ் சோப்ரா அசத்தல்

ஃபின்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் பாவோ நூர்மி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியதுடன் தனது சொந்த சாதனையையும் முறியடித்திருக்கிறார். ஃபின்லாந்து நாட்டின் துருக்கு நகரில் சர்வதேச பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையை படைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சர்வதேச போட்டியில் 88.07 மீட்டரும், அதன் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்யோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 87.58 மீட்டரும் ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்திருந்தார். இதில் டோக்யோ ஒலிம்பிக்ஸில் அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில், தற்போது பாவோ நூர்...
Open chat