Saturday, June 25

கல்வி

கல்வி-சிறுதொழில் நிதி ஒதுக்கித்தர தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தல்
கல்வி

கல்வி-சிறுதொழில் நிதி ஒதுக்கித்தர தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தல்

புதுச்சேரி:டெல்லியில் முகாமிட்டுள்ள அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மத்திய சமூக நீதி மந்திரி வீரேந்திரகுமாரை சந்தித்து பேசினார். அப்போது, புதுவை பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக மனு அளித்தார். டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டுக் கழகம், புதுவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கழகத்திற்கு கல்விக்கடன், காலக் கடன், சிறுதொழில் கடன் வழங்குவதற்கு நடப்பு நிதியாண்டுக்கு ரூ. 1 கோடி ஒதுக்கி தந்துள்ளது. இந்த தொகை போதுமானதாக இல்லை. இதனை ரூ. 5 கோடியாக உயர்த்தி கொடுத்தால் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக அளவில் கல்விக் கடன், சிறு தொழில் கடன் வழங்க முடியும் என கோரிக்கை வைத்தார். அமைச்சரின் தனிச் செயலாளர் மனோகரன் உடனிருந்தார். புதுவை மாநிலத்திற்கு ரூ. 5 கோடி ஒதுக்க பரிசீலனை செய்வதாக, மத்திய மந்திரி உறுதியளித்தார். நன்றி!! மேலும் படிக்க ...
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் ஜூன் 27-ல் வெளியீடு | 11th Results
கல்வி

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் ஜூன் 27-ல் வெளியீடு | 11th Results

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 10 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8.3 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 9-ல் தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், ஜூன் 27-ம் தேதியே பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பில், ‘‘பிளஸ் 1 தேர்வு முடிவு வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதளங்களில் முடிவுகளை அறியலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல, பள்ளிகளிலும் மதி...
தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு | Reservation is mandatory for Plus 1 student admissions
கல்வி

தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு | Reservation is mandatory for Plus 1 student admissions

சென்னை: பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மேல்நிலைக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு விதிகள், பாடப் பிரிவு வாரியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், 2022-23கல்வியாண்டில் பிளஸ்-1 மாணவர்சேர்க்கையின்போது, மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் செயல்படும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் (சிறுபான்மைக் கல்வி நிலையங்கள் நீங்கலாக) மாணவர் சேர்க்கை, இடஒதுக்கீடு முறையில் நடைபெற வேண்டும். அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம், ஆதிதிராவிடருக்கு 18 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினருக்கு 20 சதவீதம்,பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு 3.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 26.5 சதவீதம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும், ஆதிதிராவிட அருந்ததியர்கள் இருப்பின், ஆதிதிராவிடருக்கான 18 சதவீதத்தில் இருந்து 3 சதவ...
பிளஸ் 2 மாணவர்கள் கவனத்துக்கு… வேலைவாய்ப்பு உள்ள உயர்கல்வி படிப்புகள் எவை?  | 12th students Attention
கல்வி

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்துக்கு… வேலைவாய்ப்பு உள்ள உயர்கல்வி படிப்புகள் எவை?  | 12th students Attention

பிளஸ் 2 முடித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது, எதற்கு வேலைவாய்ப்புகள் அதிகம் என்பது குறித்த ஆய்வுகளில் மாணவர்கள், பெற்றோர்கள் தவிக்கும் நேரமிது. விரும்பிய பாடமா, கல்லூரி முக்கியமா என்பன பல்வேறு கேள்விகளும் மனதில் எழும். நல்ல எதிர்காலம் உள்ள நூற்றுக்கணக்கான படிப்புகள் இருந்தும் பொறியியல், மருத்துவம், உள்ளிட்ட 20 படிப்புகளைதான் பெரும்பாலான மாணவர்கள் முன்னுரிமை அளித்து தேர்வு செய்கின்றனர். அதேபோல், விருப்பமும் கனவும் ஒருபுறம் இருக்க, சமூக அழுத்தத்தால் ஆர்வமில்லாத வேறு ஒரு படிப்பை பயில வேண்டிய கட்டாயத்துக்கு பல மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். இதற்கு வேலைவாய்ப்பும், எதிர்கால வளர்ச்சியும் உள்ள படிப்புகள் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடையாததே முக்கிய காரணமாகும். அந்தவகையில் நல்ல எதிர்காலமுள்ள படிப்புகள் குறித்த தகவல்களை கல்வியாளரும், ஆனந்தம் யூத் பவுண்டேஷன்...
செம முன்னெடுப்பு! மாணவர்களுக்காக மாதம் இரு இதழ்.. தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..! | Education Department introduced a new Plan to increase the reading habit of the Students
கல்வி

செம முன்னெடுப்பு! மாணவர்களுக்காக மாதம் இரு இதழ்.. தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..! | Education Department introduced a new Plan to increase the reading habit of the Students

சென்னை: பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மாதம் இருமுறை இதழ் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தே கல்வி பயின்று வந்தனர். தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு குறைந்த கால அளவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் முழுமையாக பாடங்களை படிக்க வசதியாக திட்டமிடப்பட்டு வருகிறது. இதேபோல் மாணவர்களின் திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have alre...
The ‘Counting and Writing’ class will be available on Education TV from June 27- Dinamani
கல்வி

The ‘Counting and Writing’ class will be available on Education TV from June 27- Dinamani

‘எண்ணும் எழுத்தும்’ திட்ட மாதிரி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஜூன் 27-ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) சாா்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவா்கள் அடிப்படை கணிதத் திறனுடன் பிழையின்றி எழுதுவதை, படிப்பதை உறுதி செய்ய ‘எண்ணும், எழுத்தும்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்படுகின்றன. அதன்படி, எண்ணும் எழுத்தும் திட்ட மாதிரி வகுப்புகள் ஜூன் 27-ஆம் தேதி முதல் கல்வித் தொலைக்காட்சியில் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும். மேலும், வ...
Zee tamil news education expo nalaya ilaku 2022 show at chennai | அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்கும் ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்விக் கண்காட்சி
கல்வி

Zee tamil news education expo nalaya ilaku 2022 show at chennai | அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்கும் ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்விக் கண்காட்சி

ஜீ தமிழ் நியூஸ் (Zee News Tamil) தொலைக்காட்சியின் மாபெரும் கல்விக் கண்காட்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது.  +2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக ‘நாளைய இலக்கு’ என்ற பெயரில் இந்தக் கல்விக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. AMRITA VISHWA VIDYAPEETHAM,AMET UNIVERSITY மற்றும் DOT SCHOOL OF DESIGN உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜீ தமிழ் நியூஸ் தொலைக்காட்சியுடன் இணைந்து இந்தக் கல்விக் கண்காட்சியை நடத்துகின்றன.  காலை 9 மணி தொடங்கும் கண்காட்சி இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது. கண்காட்சிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம். மருத்துவம், பொறியியல், வணிகவியல், நிர்வாகவியல்,வரைகலை, மென்பொருள் கல்வி,டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்,டிசைனிங்க் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அனுபவமிக்க கல்வியியல் ஆலோசகர்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். மு...
13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கு பட்டதாரிகள் கடும் எதிர்ப்பு | teachers and educationist opposes tamilnadu government scheme
கல்வி

13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கு பட்டதாரிகள் கடும் எதிர்ப்பு | teachers and educationist opposes tamilnadu government scheme

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள், பட்டதாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் செயல்பட்டு வரும் 37,554 அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். 2.20 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளாதது உள்ளிட்ட காரணங்களால் அரசுப் பள்ளிகளில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 4,989 இடைநிலை, 5,154 பட்டதாரி, 3,188 முதுநிலை ஆசிரியர் காலியிடங்களை பதவி உயர்வு மற்றும் தேர்வு வாரியம் மூலம் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மாணவர்கள...
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி – தினத் தந்தி
கல்வி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி – தினத் தந்தி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி  தினத் தந்தி நன்றி!! மேலும் படிக்க
தருமபுரி புத்தகத் திருவிழா | “ஊர் திருவிழா போல கொண்டாட வேண்டும்” – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் | Education is more important than smartphones: Minister MRK panneerselvam
கல்வி

தருமபுரி புத்தகத் திருவிழா | “ஊர் திருவிழா போல கொண்டாட வேண்டும்” – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் | Education is more important than smartphones: Minister MRK panneerselvam

தருமபுரி: “இன்றைய சூழலில் சாதாரணமாக புழங்கக் கூடிய பொருளாக உள்ள ஸ்மார்ட்போன்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை தான், ஆனால், இவைகளை விட வாழ்க்கைக்கு படிப்பு மிக முக்கியம்” என்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தருமபுரி மாவட்ட நிர்வாகத்துடன் தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து 11 நாள் புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் புத்தகத் திருவிழா தருமபுரி-சேலம் சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 100 அரங்குகளுடன் இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. மேலும், 25ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை தினமும் மாலை 6 மணியளவில் மருத்துவர் சிவராமன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், பாடலாசிரியர் யுகபாரதி, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ...
Open chat