வசூல் சாதனை படைக்கும் ஸ்டார் படங்கள்; பாராட்டுகள் பெற்றாலும் தடுமாறும் சிறிய படங்கள் – காரணம் என்ன?
தயாரிப்பாளரும், இயக்குநருமான சி.வி.குமார், `தமிழ் சினிமாவின் வர்த்தக நிலவரம்' குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது உண்மையென திரையுலகினர் பலரும் ஆமோதித்து வருகின்றனர்.'சூது கவ்வும்' உள்பட பல தரமான படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "கடந்த மூன்று மாதங்களில் வெளியான சின்ன பட்ஜெட் படங்கள் எதுவும் தியேட்டர்களில் அதிக வசூலை ஈட்டவில்லை. லைஃப் டைம் ஷேராக ரூ.10 லட்சம் வரைகூட திரும்ப எடுக்கவில்லை. அதே போல 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை சம்பளம் வாங்கும் இரண்டு சதவிகித ஹீரோக்களின் படங்கள் லைஃப் டைம் ஷேராக 20 - 40 லட்சங்கள் வரைதான் ஈட்டியிருக்கின்றன. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த சின்னப் பட்ஜெட் படங்கள் எதுவும் அந்தப் படங்களை டிஜிட்டல் பிரின்ட் போட செலவிட்டத் தொகையை கூட திரும்ப எடுக்கவில்லை. நல்ல கன்டன்ட், நல்ல மேக்கிங் உள்ள படங்களை மட்டுமே வாங்க...