வேண்டுதல்களை நிறைவேற்றும் ஒத்த பனை ஜடா முனீஸ்வரர்!
இங்கு வரும் பக்தர்கள், தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக்கொண்டால் அவர்களின் குறைகள் விரைவில் தீர்கின்றன என்கிறார்கள். ஜடாமுனீஸ்வரருக்குப் பொங்கல் வைத்து வேண்டிக்கொண்டால் தீராத துன்பங்களும் தீர்கின்றன என்பது நம்பிக்கை.
கடன் பிரச்னை, எதிரிகளின் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இன்மை ஆகிய குறைகளோடு வந்து வேண்டிக்கொள்பவர்கள் விரைவில் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறப்பெருகிறார்கள் என்கிறார்கள் ஊர்மக்கள்.

வருடத்துக்கு ஒருமுறை வைகாசி மாதம் பனை மரத்தைச் சுற்றி இருக்கும் ஊர்களான ஏரி முனை, வெங்கடேசபுரம், கிளித்தாம்பட்டரை சார்ந்த இந்த மூன்று ஊர் மக்களும் ஊரைக் காக்க ஒன்றுகூடிப் பொங்கல் வைத்து முனீஸ்வரருக்கு நன்றி செலுத்துகிறார்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களின் கைகளில் பூஜை செய்யப்பட்ட கயிறு கட்டப்படுகிறது. இந்தக் கயிற்றைக் கைகளில் கட்டிகொள்கிறவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுகிறார்கள் என்பது நம்பிக்கை.