Wednesday, February 8

Day: January 25, 2023

முட்டை விலை 30 காசு குறைந்தது
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

முட்டை விலை 30 காசு குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, கடந்த சில நாட்களாக 545 காசுகளாக இருந்துவந்தது. இந்நிலையில் நேற்று என்இசிசி மண்டல தலைவர் செல்வராஜ் முட்டை விலையில், 30 காசுகள் ஒரே நாளில் குறைத்து விலை நிர்ணயம் செய்துள்ளார். இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 545 காசில் இருந்து, 515 காசுகளாக குறைந்துள்ளது. ஜதராபாத் மண்டலத்தில் முட்டை விலை குறைவாக இருப்பதால், அந்த விலையையொட்டி, நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நன்றி! மேலும் படிக்க!!! ...
மதுரையில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் | Boat Festival on Madurai Begins with Flag Hoisting
ஆன்மிகம்

மதுரையில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் | Boat Festival on Madurai Begins with Flag Hoisting

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. பிப்.4-ம் தேதி வரை 12 நாட்களுக்கு திருவிழா நடைபெறுகிறது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடிமரம் முன் சிம்மாசனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். பின்னர் கொடியேற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினமும் காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர். 6-ம் நாள் (ஜன.29) திருஞானசம்பந்தர் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெறுகிறது. ஜன.31-ல் எல்லீஸ் நகரில் வலைவீசும் படலம் நடைபெறும். பிப்.2-ம் தேதி காலை கோயிலிலிருந்து புறப்பாடாகி காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலை அடைந்து, தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும். பிப்.3-ம் தேதி...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ச.ம.க. போட்டியும் இல்லை யாருக்கும் ஆதரவு இல்லை: சரத்குமார் அறிவிப்பு
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ச.ம.க. போட்டியும் இல்லை யாருக்கும் ஆதரவு இல்லை: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சமக போட்டியும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து, சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து, முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.  யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சமத்துவ மக்கள் கட்சியின் முன்னோடிகளும், சகோதர, சகோதரிகளும் தொடர்ந்து மக்கள் நலனுக்காக தங்களை ...
திருமலையில் 28-ம் தேதி ரத சப்தமி விழா: 7 வாகனங்களில் மலையப்பர் வீதியுலா | Ratha Saptami Festival on 28th in Tirumala: Malayappar street visit in 7 Vehicles
ஆன்மிகம்

திருமலையில் 28-ம் தேதி ரத சப்தமி விழா: 7 வாகனங்களில் மலையப்பர் வீதியுலா | Ratha Saptami Festival on 28th in Tirumala: Malayappar street visit in 7 Vehicles

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழா வரும் 28-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சூரிய ஜெயந்தி, மினி பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று திருமலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் தர்மாரெட்டி கூறியதாவது: திருமலையில் வரும் 28-ம் தேதி சனிக்கிழமை ரத சப்தமி விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருள உள்ளார். இதைத்தொடர்ந்து, சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமன் வாகன சேவைகள் நடைபெற உள்ளன. மதியம் சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் பின்னர் மீண்டும் கற்பகவிருட்ச வாகனம், சர்வபூபால வாகனம் மற்றும் சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பர் 4 மாட வீதிகளில் எழுந்தருள உள்ளார். இதையொட்டி, அன்றைய தினம் சர்வ தரிசன டோக்கன் விநியோ...
அமெரிக்க வாழ் இந்தியர் சுட்டுக் கொலை: மனைவி, மகள் கவலைக்கிடம்
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

அமெரிக்க வாழ் இந்தியர் சுட்டுக் கொலை: மனைவி, மகள் கவலைக்கிடம்

நியூயார்க்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் தோரோக்பர்ட் பகுதியில் இந்தியரான பீனல் படேல்(57) அவரது மனைவி  ரூபல்பென் படேல், மகள் பக்டி படேல் ஆகியோருடன் வசித்த வந்தார். கடந்த 20ம் தேதி இவர்கள் மூவரும் வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பீனல் படேல் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும்  ரூபல்பென் படேல், பக்டி படேல் இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரும் வேறொரு நபருடன் தப்பி சென்று விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என போலீசார் கூறினர். கடந்த ஞாயிற்றுகிழமை, 23 வயது  அமெரிக்க வாழ் இந்திய இளைஞர் கொள்ளை...
அதிமுகவின் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி பாஜக தலைமைதான் காரணம்: டிடிவி தினகரன் பேட்டி
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

அதிமுகவின் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி பாஜக தலைமைதான் காரணம்: டிடிவி தினகரன் பேட்டி

புதுக்கோட்டை: அதிமுகவின் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி பாஜக தலைமைதான் காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மீண்டும் அதிமுக ஒன்று சேர்வது பாஜக நினைத்தால் மட்டுமே முடியும் என புதுக்கோட்டையில் தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக பாஜக தலைமை என்னை அழைத்தால் அப்போது முடிவெடுப்பேன் எனவும் தினகரன் கூறினார். நன்றி! மேலும் படிக்க!!! ...
வைகோ பரந்த மனசை பார்த்தீங்களா.. ஊருக்காக 5 ஏக்கர் நிலத்தை விட்டுக்கொடுத்தாராம்.. துரை வைகோ பெருமிதம் | Vaiko donated 5 acres of land to the government for the Kalingapatti people in 1988
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

வைகோ பரந்த மனசை பார்த்தீங்களா.. ஊருக்காக 5 ஏக்கர் நிலத்தை விட்டுக்கொடுத்தாராம்.. துரை வைகோ பெருமிதம் | Vaiko donated 5 acres of land to the government for the Kalingapatti people in 1988

Tamilnadu oi-Arsath Kan Updated: Tuesday, January 24, 2023, 16:54 [IST] தென்காசி: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக அரசு ஒரு ஏக்கர் இடம் தேடிக் கொண்டிருந்த நிலையில், 1988ஆம் ஆண்டு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியவர் வைகோ என அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். பிறந்த ஊருக்காக வைகோ தனது பூர்விக நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்த தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சூழலில் இது தொடர்பாக மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது; ஏதோ என்னால முடிஞ்சத செய்றேன்.. நான் என்ன எம்பியா..எம்எல்ஏவா? ஓபானாகப் பேசிய மதிமுக துரை வைகோ! கலிங்கப்பட்டி ''தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தி...
தி.மு.க., இரட்டை வேடம் மீண்டும் அம்பலம்! | DMK, double role exposed again!
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

தி.மு.க., இரட்டை வேடம் மீண்டும் அம்பலம்! | DMK, double role exposed again!

உல,க, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சுதந்திர போராட்ட தியாகி, வ.உ.சிதம்பரம் பிள்ளையை பெருமைப்படுத்தும் விதமாக, சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது, திராவிட மாடல் அரசு. அதில், வ.உ.சி.,யின் ஒரிஜினல் கையெழுத்தில் உள்ள, 'பிள்ளை' என்ற சொல்லை நீக்கி அச்சிட்டுள்ளனர்.'ஜாதி மதம் இல்லாத, சமத்துவ சமுதாயம் அமைப்போம்' என, கொள்கை முழக்கம் செய்து தம்பட்டம் அடிக்கும் திராவிட செம்மல்கள், வ.உ.சிதம்பரம் பிள்ளையை, வெறும், வ.உ.சிதம்பரம் என்று சுருக்கமாக அழைத்து அசிங்கப்படுத்தி, பேரின்பம் அடைகின்றனர்.'செய்வதையே சொல்வோம், சொல்வதையே செய்வோம்' என்று கூறும் தி.மு.க.,வினர், இப்போது புதிதாக, ஒரு புரட்சியில் இறங்கி இருக்கின்றனர். அது என்ன தெரியுமா... அதாவது, மாநிலம் முழுதும், தி.மு.க.,வில், 'வார்டு' அளவில் பொறுப்பில் உள்...
வேங்கைவயல் தீண்டாமை விவகாரம்: "நான் முதல்வராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன்”- சீமான்
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

வேங்கைவயல் தீண்டாமை விவகாரம்: "நான் முதல்வராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன்”- சீமான்

"வேங்கைவயல் விவகாரத்தில் பிறகட்சிகளை குற்றம் சொல்ல, விசிக தலைவர் திருமாவளவனுக்கு தகுதியில்லை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து முழுமையாக அறிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் சென்றார். அங்கு அப்பகுதியை பார்வையிட்ட அவர், மக்களை சந்தித்து நடந்த விபரங்களை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில்... “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் ஆதாயத்திற்காக, பிற சமூக மக்களின் ஓட்டு வங்கி...
Scan the code