Wednesday, February 8

Day: January 24, 2023

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர் உடல்கள் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டன | bodies of 4 Indians who died in the Nepal plane crash were brought home
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர் உடல்கள் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டன | bodies of 4 Indians who died in the Nepal plane crash were brought home

காஜியாபாத்: நேபாளத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர்களின் உடல்கள் நேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டன. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து அந்த நாட்டின் போக்கரா நகருக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 15-ம்தேதி காலையில் புறப்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகளும் விமானி உள்ளிட்ட 4 ஊழியர்களும் பயணம் செய்தனர். போக்காரா நகரில் புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கியது. இதுவரை 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், 4 இந்தியர்களின் உடல்கள் நேற்று உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு சாலை மார்க்கமாக கொண்டுவரப்பட்டன. அப்போது மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீஸார்...
கந்துவட்டி கொடுமை: தம்பதி தற்கொலை – Dinakaran
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

கந்துவட்டி கொடுமை: தம்பதி தற்கொலை – Dinakaran

சேலம்: சேலம் அழகாபுரத்தில் கடன் தொல்லையால், கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). இவரது மனைவி சாந்தி (56). இவர்களுக்கு ராமகவுண்டர், ராமவேல் என்ற மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த 2000ம் ஆண்டில், ராஜேந்திரன் உள்பட 9 பேர் வாங்கிய லாட்டரியில், ரூ.7 கோடி பரிசு விழுந்தது. அதில், ரூ.1 கோடி ராஜேந்திரனுக்கு கிடைத்துள்ளது. அதை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 5 மணியளவில், ராஜேந்திரனும், சாந்தியும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்து அழகாபுரம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில், ராஜேந்திரன் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அதை செலுத்த முடியாத நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த நடேசன் என்பவ...
திமுக இளைஞர் அணி பதவிக்கான நிர்வாகிகளுடன் நேர்காணல்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

திமுக இளைஞர் அணி பதவிக்கான நிர்வாகிகளுடன் நேர்காணல்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது

சென்னை: திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை பொறுப்புக்கான நேர்காணல் மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அன்பகத்தில் நேற்று நடந்தது. திமுக பொதுக்குழுவுக்கு பிறகு ஒவ்ெவாரு அணிகளிலும் மாநில அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 2வது முறையாக நியமிக்கப்பட்டார். இதன் ஒரு பகுதியாக திமுக இளைஞர் அணியில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 4,500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் மண்டலம் 1ல் உள்ள சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு(அந்தமான், மும்பை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள்) பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 24ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும...
அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் டோஸ்: நிபுணர்கள் குழு அரசுக்கு பரிந்துரை
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் டோஸ்: நிபுணர்கள் குழு அரசுக்கு பரிந்துரை

வாஷிங்டன்: பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக  அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு ஆண்டில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் உருமாறிய கொரோனா தொற்று மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். எனினும் கடந்த ஆகஸ்ட்டில் தகுதிவாய்ந்த 16 சதவீதம் பேர் மட்டுமே சமீபத்திய பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டுள்ளனர். பூஸ்டர் டோசுக்கான ேதவை அதிகமாக இருந்தாலும் உற்பத்தி குறைவாகவே உள்ளது. இந்நிலையில் உண...
ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்

வாஷிங்டன்: ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆஸ்கரின் சிறந்த ஆவண குறும்பட பட்டியலில் இந்தியாவின் The Elephant Whisperers படம் இடம்பெற்றுள்ளது. நீலகிரியை சேர்ந்த தம்பதி யானையை பராமரிப்பது குறித்த குறும்படத்தை கார்த்திக் கோன்ஸ்லேவ் இயக்கியுள்ளார். நன்றி! மேலும் படிக்க!!! ...
லகலகலக.. திடீரென மெட்ரோ ரயிலில் ஏறிய ‘சந்திரமுகி’.. பயந்து ஓடிப்போன பயணிகள்.. இது ஒரு கலகலகல வீடியோ! | Woman scares metro passengers by dressing up as Manjulika
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

லகலகலக.. திடீரென மெட்ரோ ரயிலில் ஏறிய ‘சந்திரமுகி’.. பயந்து ஓடிப்போன பயணிகள்.. இது ஒரு கலகலகல வீடியோ! | Woman scares metro passengers by dressing up as Manjulika

சந்திரமுகி கெட்டப்பில் மெட்ரோ ரயிலில் ஏறிய பெண் பயணி ஒருவர், சகபயணிகளை பதற வைத்த வீடியோ இணையத்தை கலகலக்க வைத்துள்ளது. India oi-Jaya Chitra Published: Tuesday, January 24, 2023, 19:22 [IST] ஜெய்ப்பூர்: மெட்ரோ ரயிலில் இடம் பிடிப்பதற்காக, அங்கிருந்த பயணிகளை பதறி ஓட வைத்த வேடிக்கையான வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பேருந்து மற்றும் ரயில்களில் இருக்கையைப் பிடிப்பது என்பது இப்போதும் பலருக்கு இமாலயச் சாதனைதான். அதற்காக பலரும் பல வழிகளில் முயற்சிப்பார்கள். சினிமாவிலும் இது தொடர்பான நிறைய காமெடிக் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். ஒரு படத்தில் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக ஒருவர் பாம்பை தூக்கிப் போட்டு, கண்டக்டர் வடிவேலுவைப் பதற வைப்பார். அவர்களையே ஜன்னல் வழியே பேருந்திற்குள் இறக்கி விட்டு, சீட...
14.6 லட்சம் நிறுவனங்களை காப்பாற்றிய அரசின் திட்டம்| Government scheme that saved 14.6 lakh companies
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

14.6 லட்சம் நிறுவனங்களை காப்பாற்றிய அரசின் திட்டம்| Government scheme that saved 14.6 lakh companies

மும்பை:மத்திய அரசின் இ.சி.எல்.ஜி.எஸ்., எனும், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் வாயிலாக, கிட்டத்தட்ட 14.6 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக, எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கொரோனா தொற்று நோய் பரவல் காலத்தில், தடை உத்தரவுகளால், வணிகங்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்காக, மத்திய அரசு, பிணை எதுவும் தேவைப்படாத இ.சி.எல்.ஜி.எஸ்., கடன் திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 2.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் கடனால், கிட்டத்தட்ட 14.8 லட்சம் வணிகங்கள் காப்பாற்றப்பட்டதாக, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தினால், கிட்டத்தட்ட 6.6 கோடி மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்காமல் தடுக்கப்பட்டுள்ளனர்.இத்திட்டத்தின் கீழ், வங்கிகளின் வாயிலாக...
1817 முதல் 2023 வரை.. இந்து சமய அறநிலையத்துறை உருவானது எப்படி? இருநூற்றாண்டு வரலாறு!
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

1817 முதல் 2023 வரை.. இந்து சமய அறநிலையத்துறை உருவானது எப்படி? இருநூற்றாண்டு வரலாறு!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து முழு விபரங்களையும் இங்கு அறிந்துகொள்வோம். இந்து சமய அறநிலையத்துறையும் நடப்பு சர்ச்சைகளும் தமிழ்நாட்டில் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்கக் கோரியும், அரசின் இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்தும் தமிழக பாஜகவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாவட்டத் தலைவர்கள் மற்றும் எச். ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை அளித்த பேட்டி! உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு துறையாக இந்து சமய அறநிலையத் துறை இருக்கிறது. தமிழக கோயில்களிலிருந்த...
வாரிசு கதை – செல்லூர் ராஜூ… கம்பி கட்ற கதை – ராஜேந்திர பாலாஜி | Kitchen Cabinet | 25/01/2023
வீடியோ

வாரிசு கதை – செல்லூர் ராஜூ… கம்பி கட்ற கதை – ராஜேந்திர பாலாஜி | Kitchen Cabinet | 25/01/2023

வாரிசு கதை - செல்லூர் ராஜூ... கம்பி கட்ற கதை - ராஜேந்திர பாலாஜி | Kitchen Cabinet | 25/01/2023 நன்றி! மேலும் படிக்க!!!
”பாஸ்வேர்ட் ஷேரிங் செய்தால் கட்டணம் கட்டாயம்” எப்போது முதல் தெரியுமா? – Netflix அதிரடி!
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

”பாஸ்வேர்ட் ஷேரிங் செய்தால் கட்டணம் கட்டாயம்” எப்போது முதல் தெரியுமா? – Netflix அதிரடி!

ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு மிகவும் உறுதுதணையாக ஓ.டி.டி தளங்களே செயல்பட்டன. தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாமல் இருந்தவர்களுக்கு இவை ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவே இருந்தது. இதனால் ஓ.டி.டி. தளங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அந்தந்த நிறுவனங்களும் பல முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்தன. குறிப்பாக அதிரடியாக விலையில் மாற்றம் செய்தது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஒரே நேரத்தில் ஓ.டி.டி. தளத்தை பயன்படுத்த முடியும் என பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், Netflix-ல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அந்த நிறுவனம் மிகப்பெரிய அதிரடி அறிவிப்பை கொடுத்து சப்ஸ்கிரைபர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அதன்படி நெட்ஃப்ளிக்ஸில் ஒருவரது கணக்கில் 5 ப்ரோஃபைல் வரை சேர்த்துக்கொள்ளும் அம்சம் இதுநாள் வரை இருந்து வருகிறது. தற்போது அந்த வசதிக்கு முழுக்கு போடும் விதமான அறிவிப்பைதான் நெ...
Scan the code