Wednesday, February 8

Day: January 23, 2023

ராணுவ கல்லூரியில் புகுந்த சிறுத்தை – Dinakaran
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

ராணுவ கல்லூரியில் புகுந்த சிறுத்தை – Dinakaran

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படையை சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதையொட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை, ராணுவ கல்லூரிக்குள் நடமாடுவது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. ராணுவ கல்லூரியின் தகவலையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ கல்லூரிக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி! மேலும் படிக்க!!! ...
இந்த ராசினர் இன்று (ஜனவரி 24, 2023) மன உறுதி அதிகரிக்கும்.!
ஜோதிடம்

இந்த ராசினர் இன்று (ஜனவரி 24, 2023) மன உறுதி அதிகரிக்கும்.!

மேஷம்:நீங்கள் இலக்காக நினைத்து துரத்தி கொண்டிருந்த விஷயங்களை இன்று மதிப்பாய்வு செய்ய வேண்டிய நாள். உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் சிலர் உண்மையில் உங்களுக்கு நல்லதை விரும்பாதவர்களாக இருக்கலாம். நீங்கள் இன்று உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு குறுகிய சாலைரிஷபம்:அதிக முயற்சி தேவைப்படும் ஏதாவது ஒன்றில் நீங்கள் இன்று முன்னேற்றத்தை காணலாம். எந்த விஷயத்திலும் முதல் நகர்வை மேற்கொள்வது பலவீனத்தின் அடையாளம் அல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள். வெளிப்புற சூழ்நிலைகளை விட உங்கள் உள்ளுணர்வுக்கு முன்னுரிமை கொடுங்கள்.உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புயல்மிதுனம்:கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடுகள் இன்று பலவீனமான இயக்கத்தை காண்கின்றன. இன்று யாருக்கும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். இன்று நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை பிறருக்கு...
இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ‘புல்லட்’ சின்னம் கேட்கும் எடப்பாடி அணி: தேர்தல் களத்தில் பரபரப்பு
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ‘புல்லட்’ சின்னம் கேட்கும் எடப்பாடி அணி: தேர்தல் களத்தில் பரபரப்பு

சென்னை: இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லாததால் ‘புல்லட்’ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிட எடப்பாடி அணியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தனித்தனியாக போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால், ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகி விட்டதாகவே கூறப்படுகிறது. காரணம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எடப்பாடி அணியினர் நிராகரித்து விட்டார்கள். அதிமுக பொதுக்குழு கூடி ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து...
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் ஆள்குறைப்பு அமெரிக்காவில் 80 ஆயிரம் இந்தியர் வேலையிழந்து தவிப்பு
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் ஆள்குறைப்பு அமெரிக்காவில் 80 ஆயிரம் இந்தியர் வேலையிழந்து தவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கூகுள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கையால்  80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், டிவிட்டர் உள்ளிட்ட  நிறுவனங்கள்  2 லட்சம் ஊழியர்களை வேலை  நீக்கம் செய்துள்ளது. இதில், ஏராளமான இந்தியர்கள் அடங்கும். இதுகுறித்து தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து ஐடி துறையில் 2 லட்சம் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், அமேசான், டிவிட்டர் நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர்  வேலையிழந்துள்ளனர். இந்த ஊழியர்களில் 30 முதல் 40 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் எச்-1பி, எல்1 விசாவில் அமெரிக்கா வந்தவர்கள்.  எச்-1பி விசா வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை அமெ...
மார்க்கெட் அருகே போலியாக தயாரித்ததை ஹெராயின் போதை பொருள் என விற்பனை செய்த இளைஞர் ரீகன் கைது
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

மார்க்கெட் அருகே போலியாக தயாரித்ததை ஹெராயின் போதை பொருள் என விற்பனை செய்த இளைஞர் ரீகன் கைது

தூத்துக்குடி: மார்க்கெட் அருகே போலியாக தயாரித்ததை ஹெராயின் போதை பொருள் என விற்பனை செய்த இளைஞர் ரீகன் கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்கெட் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த ரீகனை பிடித்து போலீஸ் விசாரித்துள்ளது. விசாரணையில் யூரியா உரம் மற்றும் உப்பு ஆகியவற்றை பொடியாக்கி உ ஹெராயின் என விற்பனை செய்தது தெரியவந்தது. ரீகனிடம் இருந்து 10 கிலோ போலி போதை பொருளை பறிமுதல் செய்து வடபாகம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி! மேலும் படிக்க!!! ...
மேம்படுத்தப்பட்ட ஆக்டிவா: ஹோண்டா அறிமுகம்- Dinamani
வணிகம்

மேம்படுத்தப்பட்ட ஆக்டிவா: ஹோண்டா அறிமுகம்- Dinamani

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டா் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ), தனது புகழ் பெற்ற ஆக்டிவா ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட புதிய ரகத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள கடுமையான புகை வெளியேற்ற விதிமுறைகளுக்கு ஏற்ப, வாகனத்திலிருந்து வெளியேறும் மாசுக்களின் அளவை தானாகவே கண்டறியும் (ஓபிடி2) சாதனம் பொருத்தப்பட்டு, இந்த புதிய ஆக்டிவா ரகம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ரூ.74,536, ரூ.77,036, ரூ.80,537 ஆகிய விலைகளில் (காட்சியக விலை) 3 வகைகளாக இந்த புதிய ஆக்டிவா ஸ்கூட்டா் சந்தையில் கிடைக்கும். புதிய ரகத்தில் அறிதிறன் சாவி (ஸ்மாா்ட் கீ) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் முதல்முறையாக இடம் பெற்றுள்ளன என்று ஹெச்எம்எஸ்ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு? | Due to the sudden power outage, the whole of Pakistan was severely affected
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு? | Due to the sudden power outage, the whole of Pakistan was severely affected

International oi-Halley Karthik Updated: Monday, January 23, 2023, 14:17 [IST] இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மின் விநியோக கட்டமைப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக நாடு முழுவதும் கடும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய சுமார் 12 மணி நேரம் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.34 மணியளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்னழுத்தத்தில் ஏற்பட்ட சீரற்ற தன்மையே இந்த மின்வெட்டுக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மின்வெட்டு காரணமாக கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தவித்து வருகின்றன. இது குறித்து அந்நாட்டின் மின்துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் ஜியோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது ஒரு பெரிய பிரச்னை இல்லை" என்று கூறியுள்ளார். ...
92% நிகர லாப வளா்ச்சி கண்ட கனரா வங்கி- Dinamani
வணிகம்

92% நிகர லாப வளா்ச்சி கண்ட கனரா வங்கி- Dinamani

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 92 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022 அக்டோபா்-டிசம்பா்) வங்கியின் நிகர லாபம் ரூ.2,882 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 92 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.1,502 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.26,218 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.21,312 கோடியாக இருந்தது. அப்போது ரூ.17,701 கோடியாக இருந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.22,231 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வாராக் கடன் கடந்த 2021 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான...
மோர்பி பாலத்தை பராமரித்த நிறுவன எம்.டி.,க்கு கைது வாரன்ட்| Arrest warrant for MD, the company that maintained Morbi Bridge
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

மோர்பி பாலத்தை பராமரித்த நிறுவன எம்.டி.,க்கு கைது வாரன்ட்| Arrest warrant for MD, the company that maintained Morbi Bridge

மோர்பி :குஜராத்தில், தொங்கு பாலம் அறுந்து விழுந்த விவகாரத்தில், அந்த பாலத்தை பராமரித்து வந்த, 'ஒரேவா' குழுமத்தின் நிர்வாக இயக்குனரை கைது செய்ய, நீதிமன்றம் 'வாரன்ட்' பிறப்பித்து நேற்று உத்தரவிட்டது.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மோர்பி நகரின் மச்சுச்சூ ஆற்றின் மேல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் இருந்தது.இது, கடந்த ஆண்டு அக்., 30ல் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இந்த பாலத்தை இயக்கி பராமரித்து வந்த, 'ஒரேவா' குழுமத்தைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை மாநில அரசு நியமித்தது. இந்த குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில், பாலத்தை பராமரித்து வந்த, 'ஒரேவா' குழுமம், மிக அலட்சியமாக செயல்பட்டதே விபத்துக்கு காரணம் என, விசாரணை அதிகாரி தெரிவி...
தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 38% உயா்வு
வணிகம்

தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 38% உயா்வு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 38 சதவீதம் உயா்ந்துள்ளதாக வங்கியின் நிா்வாக இயக்குரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் மொத்த வா்த்தகம் 5.69 சதவீதம் வளா்ச்சியடைந்து ரூ.78,242 கோடியை எட்டியுள்ளது. வங்கியில் வைப்புத்தொகை ரூ.43, 440 கோடியாக உயா்ந்துள்ளது. கடன்களின் மொத்தத் தொகை ரூ.34,802 கோடியாக உள்ளது. வங்கி மூலம் விவசாயம், சிறு குறு தொழில் கடன் வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. முன்னுரிமைத் துறைகளுக்கு ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள 40 சதவீதம் என்ற இலக்கை விட அதிகமாக 79.67 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த நிகர லாபம் 38 சதவீதமாக அதிகரித்துள்ளது என்ற...
Scan the code