சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டி: மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஒப்புதல்
சேலம்: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சுயேச்சை சின்னத்தில் களமிறங்க இபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா, கடந்த 4ம்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்தமாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில், மீண்டும் காங்கிரசுக்கே ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவோ, முன்பு வாய்ப்பளித்த தமாகாவை ஒதுக்கி விட்டு, தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே இபிஎஸ் அணியை சேர்ந்த ஜெயக்குமார், வளர்மதி, கோகுலஇந்திரா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தமாகா தலைவர் ஜி.கே.வாசன...