பெண்களின் சடங்குமுறை குறித்த விழிப்புணர்வு குறும்படத்திற்கு 500 விருதுகள் பெற்ற இயக்குநர் | director won 500 awards for awareness short film on women rituals
மதுரை: பெண்களின் சடங்குமுறை குறித்த விழிப்புணர்வாக எடுக்கப்பட்ட ‘சிதை’ குறும்படத்திற்கு இதுவரை 500 விருதுகள் பெற்றுள்ளார் மானாமதுரை இயக்குநர் கார்த்திராம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் கார்த்திராம் (34). இவர் 'துணிவு' பட இயக்குநர் வினோத், கன்னட பட இயக்குநர் அய்யப்ப பி ஷர்மா ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தார். தற்போது குறும்படம் இயக்கி விருதுகள் பல பெற்றுள்ளார். திருமணமாகும் வரை பெண்கள் கன்னித்தன்மையோடு இருப்பதற்கு பழங்குடியினரிடையே நிலவும் சடங்குமுறைகள், பொதுவெளியில் கடைபிடிக்கும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து ‘சிதை’ என்ற பெயரில் குறும்படமாக இயக்கியுள்ளார். இந்த குறும்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டு பெற்று பொதுநல அமைப்புகளிடமிருந்து இதுவரை 500விருதுகளை பெற்றுள்ளது.
இதுகுறித்து குறும்பட இயக்குநர் கார்த்திராம் கூறியதாவது: "பெண்கள் கன்னித்தன்மையோடு இருப்பதற்காக பெண்களி...