திறமைக்கு இடம் பொருள் ஏவல் என்பதெல்லாம் கிடையாது. அந்த கூற்றிற்கு ஏற்ப உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியிலிருந்து நவீன ராப் இசை மூலமாக கவனம் ஈர்த்து வருகின்றனர், அங்கு வாழும் சில தமிழ் இளைஞர்கள். யார் அவர்கள்? என்ன செய்கிறார்கள் என்பது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு தான் இது.
தீபமானது கோட்டையில் ஏற்றப்பட்டாலும் சரி, குடிசையில் ஏற்றப்பட்டாலும் சரி, அது கொடுக்கக்கூடிய ஒளியானது ஒன்றுதான் என்பது ஒருவரின் திறமைக்கும் சாலப்பொருந்தும். அப்படி மும்பையின் தாராவி பகுதியில் இருந்து ஒளி வீசி வீசுகின்றனர் இந்த இசைக்குழுவினர்.
”வல்லவன் வி பாசில்ஸ்” என்ற பெயரில் பதின்ம வயதைச் சேர்ந்தவர்கள் முதல் 25 வயது வரையிலானவர்களை வைத்து ஒரு குழுவாக செயல்படும் இவர்கள், தாராவி குறித்தும், தாராவியில் தங்களது வாழ்க்கை முறையை குறித்தும், தங்களது எதிர்கால கனவுகள் குறித்தும் நவீன ராப் இசை மூலமாக உலகத்தின் பார்வைக்க...