ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை தொடங்கியது தேர்தல் ஆணையம் | remote voting machine election commission starts consultation political parties
புதுடெல்லி: மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இவிஎம்) பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களை (ஆர்விஎம்) அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்காக எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் ஆர்விஎம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 72 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். ஆர்விஎம் எந்த வகையிலும் இணையத்துடன் இணைக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதையடுத்து ஆர்விஎம் குறித்து செயல் விளக்கம் அளித்து கருத்துகளை கேட்பதற்காக 8 தேசிய கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 57 மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஆ...