“பேரதிர்ச்சி”.. நேபாள விமான விபத்தில் சிக்கிய 5 இந்தியர்கள்! உயிர் பிழைப்பார்களா? தூதரகம் விளக்கம் | 5 Indians travelled in the Flight crashed in Nepal today
India oi-Noorul Ahamed Jahaber Ali
Published: Sunday, January 15, 2023, 14:17 [IST]
காத்மாண்டு: காத்மாண்டுவில் இருந்து போக்கரா சர்வதேச விமான நிலையம் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானதில் 45 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் பயணித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. ஆனால், அவர்களின் நிலை என்ன என்பது பற்றிய போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. நேபாளத்தின் போக்கரா சர்வதேச விமான நிலையத்திற்கு தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள், 4 விமான பணியாளர்களுடன் எட்டி ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. போக்கரோ விமான நிலையத்துக்கு வந்தடைந்த அந்த பயணிகள் விமானம் தரையிறங்கும் சமயத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக அருகே ...