அஞ்சல், ரயில்வே துறை இணைந்து பார்சல் வினியோக முறை துவக்கம்| Initiation of Parcel distribution system jointly by the Department of Posts and Railways
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-அஞ்சல் துறை வாயிலாக பார்சல் அனுப்பும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக, இந்திய அஞ்சல் துறையும், ரயில்வே துறையும் இணைந்து கூட்டு பார்சல் வினியோக திட்ட முறையை துவக்கியுள்ளது.இதன்படி, 35 கிலோவுக்கு மேற்பட்ட பார்சல்கள், வாடிக்கையாளரின் இருப்பிடத்தில் இருந்து பெற்று, ரயில் நிலையத்திற்கு அனுப்பப்படும்; சென்றடைய வேண்டிய இடத்தில் வினியோகிக்கப்படும்.இத்திட்டத்தின் முன்னோட்டமாக, சென்னை மண்டலம் ராணிப்பேட்டையில் இருந்து, திருமானுாருக்கு கடந்த மாதம், 7ம் தேதி, திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் வாயிலாக, திருச்சிக்கு பார்சல் அனுப்பப்பட்டது. அடுத்த நாள் வாடிக்கையாளரின் இருப்பிடத்தில் வினியோகம் செய்யப்பட்டது.இச்சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், சென்னை மண்டலத்தில் உள்ள, வர்த்தக மேம்பாடு உதவி இயக்குனரை அணுகலாம்.மேலும் விபர...