ஜோஷிமத் மட்டுமில்லை.. ஒட்டுமொத்த பள்ளத்தாக்கிற்கும் பேராபத்து.. ஆண்டுக்கு 7 செமீ புதைகிறது! பகீர் | Joshimath is sinking at alarming rate and why its danger for entire region
India oi-Vigneshkumar
Published: Thursday, January 12, 2023, 16:24 [IST]
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் தொடர்ந்து மண்ணுக்குள் புதைந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆய்வாளர்கள் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதாவது ஜோஷிமத் நகரம் ஆண்டுக்கு சில இன்ச்கள் புதைந்து வருவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இமயமலை அருகே உத்தரகண்ட்டில் அமைந்துள்ள நகரம் ஜோஷிமத். இமயமலை ஏற வருவோர்களுக்கும் ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கும் ஜோஷிமத் நகர் தான் நுழைவாயிலாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நகருக்குப் பொதுமக்கள் விசிட் அடித்து வருகிறார்கள். இப்படி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்.. பல அண்டை நகரங்களில் இருந்தும் பிழைப்பிற்கு ஜோஷிமத் வருகிற...