வாரிசு: திரை விமர்சனம் | varisu movie review
தொழிலதிபர் ராஜேந்திரனுக்கு (சரத்குமார்) 3 மகன்கள். மூத்த மகன் ஜெய் (மேகா ஸ்ரீகாந்த்), நடு மகன் அஜய் (ஷாம்) இருவரும் அப்பா சொல் கேட்டுத் தொழிலை கவனித்துக் கொள்ளும் பொம்மைகள். கடைசி மகன் விஜய் (விஜய்), சொந்தத் திறமையால் முன்னேற விரும்புகிறார். அதை அப்பா விரும்பாததால் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். 7 ஆண்டுக்குப் பின் மீண்டும் வீட்டுக்கு வர வேண்டிய சூழல். அப்பாவின் தொழில் எதிரி ஜெயப்பிரகாஷால் (பிரகாஷ் ராஜ்) சரியும் குடும்பத்தின் தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், குடும்பத்தின் சிக்கல்களையும் சரி செய்ய விஜய் என்ன செய்கிறார், ராஜேந்திரனின் தொழில் வாரிசாகும் தகுதி விஜய்க்கு வந்ததா, இல்லையா? என்பது கதை.
பார்த்துப் பழகிய கதைதான். அதை பெரும் தொழிலதிபர் கூட்டுக் குடும்பத்தில் நுழைத்தது, அம்மா - அப்பா - அண்ணன் - அண்ணி - அவர்கள் குழந்தைகள் என சென்டிமென்டாக மாற்றியது, அதன்வழி தொழிலுக்கும் குடும்பத்துக...