பழநியில் யாகசாலை பணி தொடக்கம் | Yagasala work started at Palani
பழநி: பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு யாகசாலை அமைக்கும் பணி தொடங்கியது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.27-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் உள்ள மண்டபங்கள், சிற்பங்கள், மடப்பள்ளி போன்றவை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த டிச.25-ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. ஜன.18 காலை 9 மணி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற உள்ளன. ஜன.23 முதல் கால வேள்வி பூஜைகளும், ஜன.26 காலை 9.50 முதல் 11 மணிக்குள் அனைத்து பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. ஜன.27 காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மலைக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும்.
இதை முன்னிட்டு, தற்போது மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை மற்றும் குண்டங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்...