“அத்திபட்டி போல..” புதையும் ஜோஷிமத்! மண்ணுக்குக் கீழ் என்ன நடக்கிறது! குழம்பும் வல்லுநர்கள்! பரபர | What is expert panel suggestions for Sinking Joshimath
India oi-Vigneshkumar
Updated: Sunday, January 8, 2023, 12:33 [IST]
டேராடூன்: உத்தரகண்ட் ஜோஷிமத் நகரம் திடீரென புதையத் தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாகவே அங்கு மோசமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இதனிடையே அங்கு நிலைமையை ஆய்வு செய்த வல்லுநர் குழு தங்கள் பரிந்துரைகளை அளித்துள்ளன. உத்தரகண்டில் இமயமலைக்கு மிக அருகே அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் தான் ஜோஷிமத். இமயமலை ஏற வருவபர்களுக்கும் சரி, ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கும் சரி இந்த ஜோஷிமத் நகர் தான் நுழைவாயிலாகவே இருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ச்சியாக இருக்கும் என்பதால்.. அங்குச் சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் ஜோஷிமத்திற்கு படையெடுத்து வந்தனர். ஆனால், இதுவே அந்த நகரை மிகப் பெரிய பிரச்சினையில் தள்ளிவிட்டது. புதையும் நகரம் ஜோஷிமத்! ஒட்ட...