Tuesday, February 7

Day: January 7, 2023

சென்னை அருகே தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து..!!
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

சென்னை அருகே தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து..!!

சென்னை: சென்னை அருகே தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். தீ மளமளவென பரவி வருவதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நன்றி! மேலும் படிக்க!!! ...
பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. யாருக்கெல்லாம் ஒர்க் பிரம் ஹோம் தெரியுமா? ராஜஸ்தான் அரசுக்கு பரிந்துரை | Work from Home offer for Women in menstrual periods time, Rajasthan government plans
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. யாருக்கெல்லாம் ஒர்க் பிரம் ஹோம் தெரியுமா? ராஜஸ்தான் அரசுக்கு பரிந்துரை | Work from Home offer for Women in menstrual periods time, Rajasthan government plans

India oi-Vishnupriya R Updated: Saturday, January 7, 2023, 15:56 [IST] ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை அமல்படுத்துமாறு அரசுக்கு மாநில சமூகநல வாரியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாதவிடாய் எனும் பிரச்சினை பருவமழை எட்டிய பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். 3 முதல் 5 நாட்களை வரை உதிரபோக்கு ஏற்படும் போது பெண்கள் கடும் துன்பப்படுகிறார்கள். திருமணமானதும் இந்த ரத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் கருவாக வளர்கிறது என்ற ஒரு மகிழ்ச்சி இருந்தாலும் மாதவிடாயால் அவதிப்படுவோருக்கு மட்டுமே தெரியும் அந்த வலியும் வேதனையும்! மாதவிட...
ஆன்லைனில் இலவச படிப்பு – ஏஐசிடிஇ வலியுறுத்தல் | Online Free Study – AICTE Emphasis
கல்வி

ஆன்லைனில் இலவச படிப்பு – ஏஐசிடிஇ வலியுறுத்தல் | Online Free Study – AICTE Emphasis

சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) துணைத் தலைவர் எம்.பி.பூணியா வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில் உள்ள பல்வேறு படிப்புகளை ஆன்லைனில் இலவசமாக வழங்கி வருகிறோம். இது மாணவர்களுக்கு மட்டுமல்லஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். https://collection.bccampus.ca/, https://openstax.org, https://www.ecampusontario.ca/, https://www.skillscommons.org/, https://libretexts.org/, https://www.saylor.org/ ஆகிய இணையதளங்கள் மூலம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் இதனை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே எடுத்துச் சென்று, அவர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்துமாறு கல்வி நிறுவன பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த விவரங்களை தங்களது கல்வி நிறுவன இணையதளத்தில் பகிர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நன்றி! மேலும் படிக்க!!! ...
இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 08, 2023) நிதி சார்ந்த பலன்கள் கிடைக்கும்.!
ஜோதிடம்

இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 08, 2023) நிதி சார்ந்த பலன்கள் கிடைக்கும்.!

மேஷம்:உங்களை சுற்றியுள்ள ஆற்றல் குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது. ஆகவே, நீங்கள் முன்னெடுக்கும் காரியங்களுக்கு அது உறுதுணையாக அமையாது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். புதிய திறன்களை கற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குவீர்கள்.உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிளர் செய்யப்பட்ட ஃபோட்டோரிஷபம்:உங்களை சேர்ந்த சிலர் பிறரால் ஆதிக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், அதில் இருந்து அவர்கள் வெளிவருவதற்கான உத்திகளை கையாள உள்ளனர். நீங்கள் புதிய வேலையை தேடிக் கொண்டுள்ளீர்கள் என்றால் ஆச்சரியம் தரும் வாய்ப்புகள் தேடி வரும். உறவுகளில் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம்.உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அட்டைமிதுனம்:புதிய வாய்ப்பு அல்லது இலக்கு நோக்கி நீங்கள் பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் உண்மையான முயற்சியுடன் முன்னெடுக்க வேண்டும். கடந்த சில நாட்களாக உங்கள் உடலில் தென்ப...
கோவர்த்தன கிரிதாரனைப் போற்றுவோம்: தித்திக்கும் திருப்பாவை – 24 | thiruppavai series 24
ஆன்மிகம்

கோவர்த்தன கிரிதாரனைப் போற்றுவோம்: தித்திக்கும் திருப்பாவை – 24 | thiruppavai series 24

கோவர்த்தன கிரிதாரனைப் போற்றுவோம் அன்று இவ் உலகம் அளந்தாய்! அடி போற்றி! சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய்! திறல் போற்றி! பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி! கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி! குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி! வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி! என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்! விளக்கவுரை: அன்று வாமனனாக ஈரடிகளால் உலகை அளந்த அப்பிஞ்சு திருவடிகளுக்குப் பல்லாண்டு! ராமனாக அழகிய இலங்கைக்குச் சென்று ராவணனை வீழ்த்திய உன் தோள் வலிமைக்குப் பல்லாண்டு! கண்ணனாக, சக்கர உருவில் வந்த சகடாசுரனை கட்டுக் குலைய உதைத்த உன் புகழுக்குப் பல்லாண்டு! கன்று உருவில் வந்த வத்சாசுரனை எறி தடியாக்கி, விளாமரமாக நின்ற கபித்தாசுரன் மீது எறிந்த சமயம் மடக்கி நின்ற கழலுடைய திருவடிகளுக்குப...
பாரம்பரிய மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்களுக்கு ஆர்வம் குறைவு: அரசு கல்லூரியில் 19 யுனானி இடங்கள் காலி | Students less interested in joining traditional medical courses: 19 Unani seats are vacant in Govt
கல்வி

பாரம்பரிய மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்களுக்கு ஆர்வம் குறைவு: அரசு கல்லூரியில் 19 யுனானி இடங்கள் காலி | Students less interested in joining traditional medical courses: 19 Unani seats are vacant in Govt

சென்னை: அரசுக் கல்லூரிகளில் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் ஒன்றான யுனானியில் 19 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 350 அரசு இடங்கள் நிரம்பாத நிலையில், 900-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கென 5 அரசுக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மேலும், 26 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,990இடங்களில் அகில இந்தியஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவற்றில் 65 சதவீதம் மாநில அரசு போக 35 சதவீதம் இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாக உள்ளன. இந்நிலையில், இந்தாண்டு நடத்தப்பட்ட கலந்தாய்வில், அரசு கல்லூரிகளில் 19 யுனானி இடங்கள் நிரம்பவில்லை. மேலும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்...
பழக்கடையில் சாமர்த்தியமாக கள்ள நோட்டை மாற்ற முயன்று, கையும் களவுமாக சிக்கிய மூதாட்டி!
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

பழக்கடையில் சாமர்த்தியமாக கள்ள நோட்டை மாற்ற முயன்று, கையும் களவுமாக சிக்கிய மூதாட்டி!

விருதுநகரில் பழக்கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் அகமது நகரைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (40). இவர் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகின்றார். இவரது கடையில் பாண்டி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சிவகாசி வேண்டுராயபுரத்தைச் சேர்ந்த சுப்புத்தாய் (56) என்பவர் இன்று காலை ஆப்பிள் பழம் வாங்கி விட்டு கடையில் இருந்த பாண்டி என்பவரிடம் 500 ரூபாயை கொடுத்து விட்டு மீதி சில்லரை கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த பாண்டி, ரூபாய் நோட்டை வாங்கி பார்த்து விட்டு சந்தேகமடைந்த அவர், சில்லறை எடுப்பது போல், தன்னிடம் இருந்த வேறு 500 ரூபாய் நோட்டுடன் சுப்புத்தாய் கொடுத்த 500 ரூபாய் நோட்டை ஒப்பிட்டு பார்த்துள்ளார். அப்போது, சுப்புத்தாய் கொடுத்தது கள்ள நோட்டு என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். இது குறித்து சுப்பு...
’படித்ததும் கிழித்துவிடவும்’… எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்!
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

’படித்ததும் கிழித்துவிடவும்’… எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் 47 வயதான ஹரி ஓம்சிங். இவர், அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். அதில், ’நான், உன்னை அதிகம் நேசிக்கிறேன். பள்ளி விடுமுறை நாட்களில் உன்னைக் காணாதது அதிக வருத்தத்தைத் தருகிறது. ஆகையால், உனக்கு எப்போது முடியுமோ, அப்போது தொலைபேசி வழியே நீ என்னைத் தொடர்புகொண்டு பேசு. உண்மையிலேயே நீயும் காதலித்தால் என்னைத் தேடி வருவாய். விடுமுறைக்குப் பின்னர், என்னை தனியாக வந்து சந்திக்கவும். உன்னை திருமணம் செய்துகொள்கிறேன். உன்னை எப்போதும் நேசிப்பேன்’ என எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தி...
ஏர் இந்தியா சம்பவம் | சக பயணி மீது சிறுநீர் கழித்தவர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பு | Air India Urination case: Delhi Court sends Shankar Mishra to 14 days judicial custody
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

ஏர் இந்தியா சம்பவம் | சக பயணி மீது சிறுநீர் கழித்தவர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பு | Air India Urination case: Delhi Court sends Shankar Mishra to 14 days judicial custody

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில், சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா என்பவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஷங்கர் மிஸ்ரா என்பவர் பெங்களூருவில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார். இதையடுத்து இன்று அவர் டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 354, 509, 510 மற்றும் இந்திய விமானச் சட்டம் பிரிவு 23 ஆகியவற்றின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஷங்கர் மிஸ்ரா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறஞர் மனு ஷர்மா, காவல் துறை விசாரணைக்கு ஷங்கர் மிஸ்ரா ஒத்துழைப்பு அளிப்பார் என்றும், எனவே அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை ...
Scan the code