Wednesday, February 8

Day: January 6, 2023

வடமாநிலங்களில் கடும் குளிர்; பனிமூட்டம் – கான்பூரில் ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

வடமாநிலங்களில் கடும் குளிர்; பனிமூட்டம் – கான்பூரில் ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி/ கான்பூர்: வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவை கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு நேற்று முன்தினம் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். டெல்லி அயா நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸாகவும், சப்தர்ஜங் பகுதியில் 4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. அதேபோல, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பல இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, உறைநிலைப் புள்ளிகளுக்கு அருகில் இருந்தது. நன்றி! மேலும் படிக்க!!! ...
மீண்டும் களமிறங்கியது ‘அரிசி ராஜா’ 144 தடை
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

மீண்டும் களமிறங்கியது ‘அரிசி ராஜா’ 144 தடை

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தி இரு பெண்களை மிதித்து கொன்ற அரிசி ராஜா யானையை, கடந்த மாதம் 8ம் தேதி புளியம்பாறை நீடில் ராக் வனப்பகுதியில் வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து, காங்கிரஸ் மட்டம் பீட் வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் கக்கநல்லா பகுதியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி நகர் பகுதியில் அரிசி ராஜா  நடமாடியுள்ளது. பத்தேரி நகரில் இந்த யானை சாலையில் நடமாடிய நபர் ஒருவரை துதிக்கையால் அசால்டாக தூக்கி சாலையோரம் வீசி சென்றது. இதில் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அரிசி ராஜா யானை நடமாட்டம் காரணமாக சுல்தான் பத்தேரி சுற்றுவட்டத்திற்கு உட்பட்ட 10 டிவிசன் பகுதிகளில் பொதுமக்கள் வெளியில் நடமாட 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப...
 ஆளுநருக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

 ஆளுநருக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு என்ற பெயர் மாநிலத்துக்கு சூட்டப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்த உயிர்த் தியாகம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றைக்கும் முக்கிய இடம் உண்டு. பாஜவின் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னெடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தனது ஆரிய சார்பு கருத்துகளை பரப்பும் விதமாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல. நன்றி! மேலும் படிக்க!!! ...
36 மணி நேர போர் நிறுத்தம் ரஷ்யாவின் அறிவிப்பை உக்ரைன் நிராகரித்தது
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

36 மணி நேர போர் நிறுத்தம் ரஷ்யாவின் அறிவிப்பை உக்ரைன் நிராகரித்தது

கீவ்: ரஷ்யா விடுத்த இரண்டு நாள்  போர் நிறுத்த அறிவிப்பை உக்ரைன் நிராகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர்  ஆரம்பித்து ஒரு வருடத்தை நெருங்குகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகள் செய்து வருவதால் உக்ரைன் வீரர்கள்  போரிட்டு வருகின்றனர். ரஷ்யாவில் பாரம்பரிய ஆர்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து 6 மற்றும் 7ம் தேதிகளில் (நேற்றும்,இன்றும்) 36 மணி நேர போர் நிறுத்தத்திற்கு அதிபர் புடின் அழைப்பு விடுத்திருந்தார். போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக போர் நிறுத்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டுள்ளது.ஆனால்  போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன்  அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா கூறுகையில், ‘‘உக்ரைனில் ரஷ்யா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும்’’ என்றார். கூடு...
விடை பெற்றார் பீலே
விளையாட்டு

விடை பெற்றார் பீலே

சாவ் பாலோ: பிரேசில் ஜாம்பவான் பீலே உடல்  , அவர் விரும்பியபடி நெக்ரோபோல் கல்லறையின் ஒன்பதாவது மாடியில் அடக்கம் செய்யப்பட்டது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, 82. மூன்று முறை உலக கோப்பை (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம்பிடித்த உலகின் ஒரே வீரர். ‘கேன்சர்’ பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த பீலே, டிச. 29ல் காலமானார். சிறு வயதில் விளையாடிய சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ கால்பந்து மைதானத்தில், ரசிகர்கள் அஞ்சலிக்காக பீலே உடல் 24 மணி நேரம் வைக்கப்பட்டது. பின் அரசு மரியாதைப்படி தீயணைப்பு வாகனத்தில் பீலே உடல் அடங்கிய பெட்டி ஏற்றப்பட்டு, சான்டோஸ் நகர தெருக்களில் ஊர்வலமாக சென்றது. அவரது தாயார் செலஸ்டே அரான்டஸ் வசிக்கும் வீடு வழியே கொண்டு செல்லப்பட்டது. அடுத்து சான்டோசில் உள்ள உலகின் உயரமான 14 மாடி கட்டடம் கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா கல்லறையின் 9வது மாடியில் அடக்கம் செய்யப்பட்டது. 19 ஆண்டுக்கு முன...
பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12 ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12 ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12 ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய தகவல்களை பெற மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு கல்லூரிகள் மின்னஞ்சல் வாயிலாகவே தகவல்கள் அனுப்பும் என்பதால் உயர்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.  நன்றி! மேலும் படிக்க!!! ...
மதிய உணவு திட்டத்தில் சிக்கன், பழங்கள்.. மம்தா பானர்ஜி சூப்பர் பிளான்..ஆனாலும் ஒரே ஒரு சிக்கல் | Mamata Banerjee Government in West Bengal announced chicken in School mid day meals scheme and BJP oppose
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

மதிய உணவு திட்டத்தில் சிக்கன், பழங்கள்.. மம்தா பானர்ஜி சூப்பர் பிளான்..ஆனாலும் ஒரே ஒரு சிக்கல் | Mamata Banerjee Government in West Bengal announced chicken in School mid day meals scheme and BJP oppose

India oi-Mani Singh S Updated: Friday, January 6, 2023, 17:42 [IST] கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுடன் வாரத்திற்கு ஒருநாள் கோழிக்கறி மற்றும் பழங்கள் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 16 வாரங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் இந்த திட்டம் பெரும் நிதி முறைகேடு கொண்டது என பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு தற்போது மதிய உணவு திட்டத்தில் அரிசி சாதம், பருப்புகள், காய்கறிகள், சோயாபீன் மற்றும் முட்டைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் மூலம் மொத்தம் 1.16 கோடி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 60 : 40 என்ற ...
காப்புக் காடு என்ற சொல் நீக்கம் சரி தான்: துரைமுருகன்| The deletion of the term protected forest is correct: Duraimurugan
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

காப்புக் காடு என்ற சொல் நீக்கம் சரி தான்: துரைமுருகன்| The deletion of the term protected forest is correct: Duraimurugan

சென்னை: 'தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் வழியாக, 'காப்புக் காடு' என்ற சொல் நீக்கப்பட்டது சரியே' என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:குவாரி உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில், கடந்த டிச.,14ல் திருத்தம் செய்யப்பட்டது.இதன்படி, தேசிய பூங்கா, வன விலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் ஆகியவற்றில் இருந்து, 1 கி.மீ., சுற்றளவுக்குள், குவாரி பணிகளுக்கான தடை நீடிக்கிறது.'பாதுகாக்கப்பட்ட காடு' என்றால், சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்கள் தான்; காப்புக் காடு அல்ல.புதிய விதி திருத்தம் வழியே, காப்புக் காடுகளுக்கு அருகில் உள்ள, பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில், புதியதாக கனிமம் வெட்டி எடுக்க, நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.குத்தகை உரிமம் வழங்கும்போது, காப்புக் காடுகளின் எல்லைகளில் இருந்து, 60 மீட்டர் சுற்றளவு, எந்தவ...
கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் – ஜல்லிக்கட்டு போட்டிக்கான நெறிமுறைகள் வெளியீடு!
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் – ஜல்லிக்கட்டு போட்டிக்கான நெறிமுறைகள் வெளியீடு!

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இப்போதே வேகம் பிடித்துள்ளன. இதற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு அதற்கான இடங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காளைக்கான உரிமையாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் இரு தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண...
Scan the code