தண்ணீர் பாதுகாப்புக்கு மக்கள் பங்களிப்பு அவசியம்: மாநில நீர்வளத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவுரை | people participation essential for water conserve pm modi advise water resources
புதுடெல்லி: தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்வதில் மக்களின் பங்களிப்பு அவசியம் என்று மாநில நீர்வளத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய ஜல் சக்தி துறை சார்பில் மாநில நீர்வளத் துறை அமைச்சர்களின் முதல் அகில இந்திய மாநாடு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:
நாட்டின் தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானதாகும். இதை கருத்தில் கொண்டு ‘தண்ணீர் தொலைநோக்கு 2047’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் மாநாடு நடைபெறுகிறது. தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெப்போதும் இல்லாத வகையில் பன்மடங்கு முதலீடுகளை அதிகரித்து வருகிறோம். நாடு முழுவதும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நமது அரசியல் சாசனத்தில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் ...