புதுடெல்லி: மத்திய அரசு கடந்த 2016-ல் மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று கூறிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அந்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் பலர் பாதிக்கப்பட்டதாகக் கூறி, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்த, நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியம் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசி...