சிறப்பாக செயல்படும் 150 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் – நேரடி ஆய்வின்றி வழங்க அண்ணா பல்கலை. முடிவு | Accreditation to 150 best performing colleges – Anna University to grant without direct inspection
சென்னை: சிறப்பாகச் செயல்படும் 150 கல்லூரிகளுக்கு நேரடி ஆய்வின்றி அங்கீகாரம் வழங்க அண்ணா பல்கலை. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை. 88 கல்லூரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களும், 177 கல்லூரிகளில் 50 சதவீத அளவிலும் மட்டுமே மாணவர்கள் சேர்ந்திருந்தனர்.
இந்நிலையில் பொறியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அமல்படுத்துவதற்கான சில முக்கிய முடிவுகளை அண்ணா பல்கலை. எடுத்துள்ளது. அதன்படி, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் நேரில் சென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கட்டாயம் வழங்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய வழிமுறைப்படி அங்கீகாரம் அளிக்க மு...