Aval Vikatan – 20 March 2018 – நீலி | Neeli amman: Divine human Gods stories – Aval Vikatan
பொழுது சாஞ்சிருச்சு. நீலிக்குப் புதரை விட்டு வெளியே வர பயம். திரும்பவும் மாமங்காரன் அடிச்சுப்போட்டான்னா..? அதுக்குள்ளயே உக்காந்து அழுதுக்கிட்டி ருந்தா. கண்ணுபடுற தூரத்துல கட்டு விரியனும் சாரையும் சரசரன்னு திரியுது. நேரமாக ஆக பயமாப்போச்சு. `வேலைக்குப் போன அம்மையும் பாட்டியும் இருட்டினபிறகு தான் வீட்டுக்கு வருவாக. அவுக வந்தபிறகு வீட்டுக்குப் போகலாம்.அதுவரை இதுக்குள்ளயே இருக்கலாம்'னு ஒளிஞ்சிருந்தா நீலி. அந்த வழியா மாந்திரிகத் தொழில் செய்ற கணியர் ஒருத்தரு வந்தார். புதருக்குள்ள ஒரு பொண்ணு இருக்கிறதைப் பாத்து, பக்கத்துல போயி ‘என்ன, ஏது’ன்னு விசாரிச்சார். எல்லாக்கதையும் சொன்னா நீலி. புதரைவிட்டு வெளியே வரச்சொல்லி, தன்கிட்ட இருந்த இளநீ, பழம், அவல் எல்லாத்தையும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். பசியாலயும் வலியாலயும் துவண்டு போயிருந்த நீலி, அவர் கொடுத்ததை வாங்கித் தின்னா. தின்னு முடிச்சதும் அவளுக்கு ஆற...