அதானி நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலீடு: பார்லிமென்டில் மத்திய அரசு விளக்கம்| LIC, Investment in Adani Companies: Central Government Explanation in Parliament
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் முறையாக பின்பற்றியே அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக எல்.ஐ.சி., எனப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளதாக, ராஜ்யசபாவில்தெரிவிக்கப்பட்டது.அதானி குழுமம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங் குகளின் மதிப்பு கடுமையாக சரிந்தது.இந்நிலையில், எல்.ஐ.சி., எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாகவும், அது பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'எல்.ஐ.சி.,யின் மொத்த சொத்து மதிப்பு 41.66 லட்சம் கோடி ர...