”ஊரடங்கு போனதும் வேலைய காட்றாங்க..” – வடமாநிலத்தவர்களை நீக்கச் சொல்லி அரியலூரில் போராட்டம்
அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலை நிர்வாகம், ஏற்கனவே பணிபுரிந்த உள்ளூர் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு வடமாநில தொழிலாளர்களுக்கு பணிநியமனம் செய்ததை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தை சேர்ந்தவர்கள் அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூரில் செயல்பட்டு வரும் அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலையில், லோடிங் ஒப்பந்த தொழிலாளர்களாக ஏற்கனவே பணிபுரிந்த தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, அவர்களுக்கு பதிலாக வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்தும் மீண்டும் அவர்களை அதே பணியில் தங்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தை சேர்ந்தவர்கள், அரியலூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில், அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர் க...