"மோடியின் வெளிநாட்டு பயணத்தில் அதானிக்கு கிடைத்த ஒப்பந்தங்கள் எத்தனை?” – ராகுலின் 5 கேள்வி
”பிரதமர் மோடிக்கும் தொழிலதிபர் அதானிக்கும் என்ன தொடர்பு” என நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி விவகாரம்; முடங்கிய நாடாளுமன்றம்!
அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையால், ஆசியாவிலேயே மிகப் பிரபலமான அதானி குழுமம் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. உலக அளவில், அதானி விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாய் வெடித்து வருகிறது. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு வருகின்றன. நேற்று (ஜனவரி 6) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த...