தமிழ் பாடத்தில் 100க்கு 100 பெற்ற திருவள்ளூர், திருச்செந்தூர் மாணவிகள் – ஆசிரியரின் ஊக்குவிப்பே காரணம் என நெகிழ்ச்சி | two students score 100 in tamil subjects in tamilnadu
திருவள்ளூர்/ தூத்துக்குடி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாணவி கீர்த்தனாவும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் திருச்செந்தூர் மாணவி துர்காவும் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.கா. கீர்த்தனா மாநில அளவில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
கணினி அறிவியல் - கணிதப் பாடப் பிரிவை எடுத்து படித்த கீர்த்தனா, திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியை சேர்ந்தவர். கீர்த்தனாவின் தந்தை முனிவரதன், திருவள்ளூரில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிகிறார்.
‘‘பேச்சுப் போட்டிகளில் நான் வெற்றி பெறுவதால், தமிழ் பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்று என் தமிழாசிரியர் தரணி தொடர்ந்து ஊக்குவித்த...