10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது – பிளஸ் 1 தேர்வு முடிவுகளையும் விரைவில் வெளியிட திட்டம் | tamilnadu 10th, 12th public exam results will be released tomorrow
சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 10-ம் வகுப்பு தேர்வை 9.5 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை 8.3 லட்சம் மாணவர்களும் எழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20) வெளியிடப்பட உள்ளன. அதன்படி பிளஸ் 2-க்கு காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்புக்கு மதியம் 12 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
வலைதள முகவரி
இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய வலைதளங்களில் அறிந்து கொள்ளலாம். இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்துமைய, கிளை நூலகங்கள் மற்றும் மாணவர்கள் ப...