Monday, June 20

Day: June 17, 2022

'இனி சாய்ந்து படுத்துவிட மாட்டேன்' – 'விக்ரம்' சக்சஸ் மீட்டில் கமல்ஹாசன்
சினிமா

'இனி சாய்ந்து படுத்துவிட மாட்டேன்' – 'விக்ரம்' சக்சஸ் மீட்டில் கமல்ஹாசன்

விக்ரம் படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் படத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் "இந்தப் படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று சொல்ல முடியாது. சினிமா தெரிந்தவர்களுக்கு அது தெரியும். RKFI என்பது நான்கு எழுத்து என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இதன் பின்னால் 40 பேர் இருக்கிறார்கள். முக்கியமாக மூன்றுபேர். அதில், சந்திரஹாசனையும் டி.என்.எஸ்ஸையும் இழந்திருக்கிறேன். அவர்கள் இடத்தை மகேந்திரனும் டிஸ்னியும் நிரப்பியுள்ளார்கள். பெயர் தெரியத் தேவையில்லை என ஒதுங்கி நிற்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நன்றி!! மேலும் படிக்க ...
‘கடைசிவரை நிராகரிப்பின் காரணம் சொல்லவில்லை’ – இளையராஜா குறித்து இயக்குநர் சீனு ராமசாமி வேதனை | seenuramasamy about music director ilayaraaja
சினிமா

‘கடைசிவரை நிராகரிப்பின் காரணம் சொல்லவில்லை’ – இளையராஜா குறித்து இயக்குநர் சீனு ராமசாமி வேதனை | seenuramasamy about music director ilayaraaja

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிரமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி இளையராஜா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். சீனு ராமசாமி பேசுகையில், "இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது. அதை இளையராஜா பார்த்துவிட்டார். ஆனால் இந்தப் படத்தின் பாடல் உருவாக்கம், ரீரெக்கார்டிங்கில் இரண்டுக்குமே கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை. இதை முதலில் நான் கேட்கவும் இல்லை. பின்னர் இரண்டு மூன்று முறை கேட்டாலும், என்னை எதற்காக அழைக்கவில்லை என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. படத்தின் ஒப்பந்தத்தின் போதே அவர்களுக்குப் பிடித்த கவிஞர்களுடன்தான...
18.06.22 சனிக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன் | 18062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan
ஆன்மிகம்

18.06.22 சனிக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன் | 18062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. நன்றி!!
‘மாமனிதன்’ படம் பார்ப்பவர்களுக்கு பெரிய அனுபவமாக இருக்கும் – விஜய் சேதுபதி | vijay sethupathi about mamanithan movie
சினிமா

‘மாமனிதன்’ படம் பார்ப்பவர்களுக்கு பெரிய அனுபவமாக இருக்கும் – விஜய் சேதுபதி | vijay sethupathi about mamanithan movie

'மாமனிதன்' பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி "இந்தப் படம் பார்ப்பவர்களுக்கு பெரிய அனுபவமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் 4-வது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் 'மாமனிதன்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், சாஜி சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 'மாமனிதன்' படத்திற்காக முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்தப்படம், கரோனா அச்சுறுத்தல் மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால் ரிலீசாகாமல் இருந்து வந்தது. இதையடுத்து 4 முறை தள்ளிப்போன இந்தப் படத்தின் வெளியீட்டால் ரசிகர...
பூரிப்பான பேச்சும்.. விதவிதமான உணவுகளுடன் விருந்தும்.. களைகட்டிய விக்ரம் சக்சஸ் ப்ரஸ் மீட்
சினிமா

பூரிப்பான பேச்சும்.. விதவிதமான உணவுகளுடன் விருந்தும்.. களைகட்டிய விக்ரம் சக்சஸ் ப்ரஸ் மீட்

கடந்த பத்து வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியான என் படம் விக்ரம் தான்!" - கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. இந்தப் படம் வசூலில் பெரிய சாதனைகள் படைத்தததைக் கொண்டாடும் விதமாக படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், படத்தை வெளியிட்ட உதயநிதி, செண்பக மூர்த்தி, கோபுரம் சினிமாஸ் அன்புசெழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனிருத் பேசும் போது, "விக்ரம் தொடங்கியதில் இருந்தே ஒரு நேர்மறையான உணர்வு இருக்கிறது. அதுதான் இவ்வளவு வெற்றியை கொடுத்திருக்கிறது. கேரளாவில் ஒருவர் கமல் உங்களுக்கு என்ன கிஃப்ரனட் கொடுத்தார் எனக் கேட்டார், விக்ரம் கொடுத்ததே கிஃப்ட் தான். படத்தின் பின்னணி இசையை வெளியிட சொல்லி கேட்கிறார்கள். அது தயாராகிவிட்டது விரைவில...
Vikram Success Meet: “சாய்ஞ்சு படுத்தர மாட்டேன். தெளிவா நிமிர்ந்து உட்கார்ந்து வேலை செய்வேன்!”- கமல் | Kamal Haasan speech in Vikram movie success meet
சினிமா

Vikram Success Meet: “சாய்ஞ்சு படுத்தர மாட்டேன். தெளிவா நிமிர்ந்து உட்கார்ந்து வேலை செய்வேன்!”- கமல் | Kamal Haasan speech in Vikram movie success meet

"ஒரு படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என ஒருவர் சொல்ல முடியாது. சினிமா தெரிஞ்சவங்களுக்கு அது தெரியும். RKFI என்பது நான்கு எழுத்துன்னு நினைச்சுட்டு இருக்கீங்க. அதுக்கு பின்னாடி 40 பேர் இருக்காங்க. முக்கியமா மூணு பேரு. அதுல சந்திரஹாசனையும் டி.என்.எஸ்ஸையும் இழந்திருக்கிறேன். அவர்கள் இடத்தை மகேந்திரனும் டிஸ்னியும் நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். பேர் தெரியத் தேவையில்லை என ஒதுங்கி நிற்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.சினிமாவில் வேலை கிடைக்கணும் என வந்தவன் நான். நடிப்பதற்காக சினிமாவுக்கு வரவில்லை. அதனைக் காட்டியவர் பாலசந்தர். உங்களை மாதிரி டெக்னீசியன் ஆகணும்னு சொன்ன போது, 'அட, போடா. ஆட்டோவுக்கு அலையுற. உனக்கு கார் வாங்கி தரேன். நீ நடி. அப்புறம் பாரு' என என்னை நடிக்க வைத்தவர் பாலச்சந்தர். அவர் படங்களில் மட்டுமே வெவ்வேறு ரோல் பண்ணிட்டு இருந்தா போதும் என இருந்தவனுக்கு பல வெற்றிகளைத் தமிழக மக்களும்,...
”என்னை ஏன் ரீ ரிக்காடிங்க்கு கூப்பிடல?” – இளையராஜா மீது சீனுராமசாமி பகீர் புகார்
சினிமா

”என்னை ஏன் ரீ ரிக்காடிங்க்கு கூப்பிடல?” – இளையராஜா மீது சீனுராமசாமி பகீர் புகார்

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ செய்தியாளர் சந்திப்பில், அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, இளையராஜா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இயக்குநர் சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியுள்ள படம் ‘மாமனிதன்’. யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம் பொருளாதார பிரச்சனையால், நீண்ட நாள்களாக ரிலீஸாகாமல் இருந்தநிலையில், வரும் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் வெளியிடுகிறார். இந்தப்படத்தில் முதல்முறையாக இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இந்தப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, ‘மாமனிதன்’ படத்தின் பாடல் கம்போஸிங்கின்ப...
Vikram: "Lokesh Universe-னு எல்லாரும் சொல்றப்போ… "- மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்
சினிமா

Vikram: "Lokesh Universe-னு எல்லாரும் சொல்றப்போ… "- மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் பெரும் வசூல் சாதனைகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் விக்ரம் படத்தின் வெற்றிவிழா சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த வெற்றி விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ்விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "எல்லாரும் யூனிவெர்ஸ்னு சொல்லும்போதும் கொஞ்சம் பயமா இருக்கு. இது கமல் சார் கொடுத்த இடம். காரணம் இந்த படத்தோட தயாரிப்பாளர், என்னோட ஹீரோ, நான் சின்ன வயதிலிருந்து பார்த்த என்னோட ரோல் மாடல் என இந்த மூன்றும் சேர்ந்திருந்தார் கமல் சார். எனவே அவருக்கு படம் பண்ணும்போது சாதாரணமா...
Vikram: “லோகி, உண்மையான கமல் ரசிகர் நீங்கள்… படம் ரயில் அல்ல ராக்கெட்; வசூல் இதுதான்!” – உதயநிதி | Udhayanidhi Stalin speech in Vikram movie success meet
சினிமா

Vikram: “லோகி, உண்மையான கமல் ரசிகர் நீங்கள்… படம் ரயில் அல்ல ராக்கெட்; வசூல் இதுதான்!” – உதயநிதி | Udhayanidhi Stalin speech in Vikram movie success meet

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது `விக்ரம்' திரைப்படம். படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இதன் வெற்றிவிழா சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். 'விக்ரம்' பிரஸ்மீட்அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "கமல் சார் இப்படத்தை எனக்குத்தான் முதலில் போட்டுக் காண்பித்தார். அப்போதே தெரியும் படம் வெற்றிபெறும் என்று, ஆனால் இப்படி மாபெரும் வெற்றிபெறும் என்று நினைத்துப்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் இப்படத்தின் வசூல் இதுவரை 75 கோடியைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் ஆறு வாரங்கள் வரை ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரங்களில்கூட தியேட்டர்கள...
'கமல் உங்களுக்கு என்னப் பரிசு கொடுத்தார்?' – தனது ஸ்டைலில் பதிலளித்த விஜய் சேதுபதி!
சினிமா

'கமல் உங்களுக்கு என்னப் பரிசு கொடுத்தார்?' – தனது ஸ்டைலில் பதிலளித்த விஜய் சேதுபதி!

‘விக்ரம்’ படத்தில் சந்தானமாக நடித்து மிரட்டிய தங்களுக்கு, நடிகர் கமல்ஹாசன் என்னப் பரிசு கொடுத்தார் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு விஜய் சேதுபதி தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படம், 13 நாட்களிலேயே 340 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. தற்போதும் திரையரங்குகளில் ‘விக்ரம்’ படத்திற்கு வரவேற்பு இருந்து வரும் நிலையில், வரும் நாட்களில் வசூலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில், 3 மனைவிகள், பெரிய கூட்டுக் குடும்பம், போதைப் பொருள் கடத்தல் என ‘விக்ரம்’ படத்தில் சந்தானமாக மிரட்டிய நடிகர் விஜய் சேதுபதியிடம் கமல்ஹாசன் தங்களுக்கு என்னப் பரிசு கொடுத்தார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்து பேசிய அவர், ‘கமல் சாரோட நடிக்கிற வாய்ப்ப க...
Open chat