பல்லேகலே: இலங்கை-ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி பல்லேகலே மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 300ரன் எடுத்தது.அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் நாட்அவுட்டாக 86 (87 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிசாங்கா 56 , குணதிலகா 55, அசலங்கா , ஹசரன்கா தலா 37 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில், ஆஷ்டன் அகர், மார்னஸ் லாபுசாக்னே தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் டக்அவுட் ஆக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44(41பந்து) ரன் அடித்தார. 12.4ஓவரில் 2விக்கெட் இழப்பிற்கு 72ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின்னர் 44 ஓவரில் 282ரன் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கிய நிலையில் லாபுசாக்னே 24, ஸ்டீவன் ஸ்மித் 53, ஸ்டோனிஸ் 44, அலெக்ஸ் கேரி 21 ரன்னில் ஆட்டம் இழந்தனர். மேக்ஸ்வெல் மற்றொரு புறம் நாட்அவுட்டாக 51 பந்தில், 6பவுண்டரி,6 சிக்சருடன் 80 ரன் விளாச 42.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 282ரன் எடுத்த ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.