‘4 வருடமாக இந்தக் கதையை எழுதினேன்’ – ‘வள்ளி மயில்’ திரைப்படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் | director suseenthiran about valli mayil movie
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் காமெடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் 'வள்ளி மயில்'. 1980 -களில் புகழ் பெற்ற 'வள்ளி திருமணம்' நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக 'வள்ளி மயில்' திரைப்படம் உருவாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1980 காலக்கட்ட பின்னணியை தத்ருபமாக காட்சிப்படுத்தும் வகையில் , ரூ.1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக, பழமையான சென்னையை கட்டமைக்கும், பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சென்ன...