ஆனந்த் 3வது இடம்: நார்வே செஸ் தொடரில்
ஸ்டாவன்ஜர்: நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் ஆனந்த் 3வது இடம் பிடித்தார்.
நார்வேயில், சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதில் ‘உலக சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 52, உள்ளிட்ட உலகின் ‘டாப்–10’ வீரர்கள் பங்கேற்றனர். இதன் எட்டாவது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அஜர்பெய்ஜானின் ஷக்ரியார் மமேத்யாரோவ் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 22வது நகர்த்தலின் போது தோல்வியடைந்தார்.
அடுத்து நடந்த ஒன்பதாவது, கடைசி சுற்றில் ஆனந்த், நார்வேயின் ஆர்யன் தாரி மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 22வது நகர்த்தலின் போது ‘டிரா’ ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘சடன் டெத் டை–பிரேக்’ முறைக்கு சென்றது. இதில் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஆனந்த், 87வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
ஒன்பது சுற்றுகளின் முடி...