அங்கன்வாடி மையங்களுக்கு மழலையர் வகுப்பு மாற்றப்பட்டது ஏன்? – பள்ளிக்கல்வித் துறை விளக்கம் | school education dept explains Why KG classes was shifted to Anganwadi Centers
சென்னை: ஆசிரியர் பற்றாக்குறை, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் அமலாக்கம் உள்ளிட்ட காரணங்களால் மழலையர் வகுப்புகள் அங்கன்வாடி மையங்கள் வசம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019-ம் ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்பட்டன. இந்த மழலையர் வகுப்புகளைக் கையாள தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு மழலையர் வகுப்பு குழந்தைகளைக் கையாள்வதில் சிக்கல்களும், புரிதல் இன்மையும் நீடித்தது. மறுபுறம் தொடக்கக்கல்வி இயக்குநரகத்தில் 2013-14-ம் கல்வியாண்டு முதல் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவில்லை.
இதனால் கடந்...