‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஏபிஜே அகாடமி இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கையெழுத்து பயிற்சி | hand writing training for students
Last Updated : 08 Jun, 2022 04:44 AM
Published : 08 Jun 2022 04:44 AM Last Updated : 08 Jun 2022 04:44 AM
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஏபிஜே அகாடமி உடன் இணைந்து நடத்தும் மாணவ - மாணவிகளுக்கான கோடைகால கையெழுத்து பயிற்சி இன்று முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் நடக்கிறது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், பல்வேறு செயல்பாடுகளை நேரடியாகவும், ஆன்லைனிலும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, 6 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கான கோடைகாலப் பயிற்சியாக நடத்தப்படும் இந்த ஆன்லைன் கையெழுத்துப் பயிற்சியில் மாணவ-மாணவிகளின் கையெழுத்துத் திறனை வளர்த்தெடுக்கும் வகையில் பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அள...