Saturday, June 25

Day: June 4, 2022

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 6.70 லட்சம் பேர் மீண்டும் தேர்வெழுத நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் | reexam process starts foe 6.70 lakh students
கல்வி

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 6.70 லட்சம் பேர் மீண்டும் தேர்வெழுத நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் | reexam process starts foe 6.70 lakh students

Last Updated : 05 Jun, 2022 04:30 AM Published : 05 Jun 2022 04:30 AM Last Updated : 05 Jun 2022 04:30 AM சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 5 வயது ஆன மாணவர்களின் சேர்க்கை வழக்கம்போல நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளை சேர்ந்த 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதற்கான காரணம் குறித்து கண்டறியப்படும். அத்துடன், அவர்கள் சிறப்பு தேர்வு எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விளையாட்டுத் துறையில் சிலம்பம் ...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் சாம்பியன்
விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப்புடன் (18 வயது, 23வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (21 வயது) 6-1, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தினார். ஏற்கனவே 2020ல் பிரெஞ்ச் ஓபன் கோப்பையை கைப்பற்றி இருந்த அவர், நேற்று 2வது முறையாக பட்டம் வென்று அசத்தினார். இது அவர் வெல்லும் 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். நடப்பு சீசனில் இகா தொடர்ச்சியாக 6 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளதுடன், 35 போட்டிகளில் தோற்காமல் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார். * யாருக்கு வாய்ப்பு? இது சோம்தேவ் கணிப்புபிரெஞ்ச் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பைனலில் வெற்றி யாருக்கு என்பது குறித்து, சோனி நெட்வொர்க் சார்பில் நேற்று ஏற்பாடு...
பைனலில் கேஸ்பர் சவால் 14வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்?
விளையாட்டு

பைனலில் கேஸ்பர் சவால் 14வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்?

பிரெஞ்ச் ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் நார்வே வீரர் கேஸ்பர் ரூ.ட் சவாலை இன்று எதிர்கொள்ளும் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், இந்த தொடரில் 14வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கத்தை தொடர்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடால், இங்கு 13 முறை கோப்பையை முத்தமிட்டு ஈடு இணையற்ற சாதனை வீரராக முத்திரை பதித்துள்ளார். நடப்பு தொடரின் பைனலில் அவர் இன்று கேஸ்பருடன் மோதுகிறார். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையை வசப்படுத்துவதில், டென்னிஸ் உலகின் மும்மூர்த்திகளாக விளங்கும் பெடரர் (20 பட்டம்), நடால் (21 பட்டம்), ஜோகோவிச் (20 பட்டம்) இடையேயான போட்டி இன்னும் தொய்வின்றி தொடர்ந்து வரும் நிலையில், நடால் தனது 22வது பட்டத்தை கைப்பற்றி முன்னிலையை அதிகரிக்கும் வாய்ப்பு பிரகாசமா...
05.06.22 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன் | 05062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan
ஆன்மிகம்

05.06.22 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன் | 05062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. நன்றி!!
இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்
விளையாட்டு

இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்

பாகு: உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு இரண்டு வெள்ளிப்பதக்கம் கிடைத்தன. அஜர்பெய்ஜானில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் (‘ஏர் ரைபிள்’, ‘ஏர் பிஸ்டல்’, ‘ஷாட்கன்’) போட்டி நடக்கிறது. இந்தியா சார்பில் 12 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன் பிரிவு போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் 406.5 புள்ளிகள் பெற்று இரண்டவது இடம் பிடித்தார். டென்மார்க்கில் இப்சென் (411.4) முதலிடம் பெற, இந்தியாவின் ஆயுஷி 585, ஆஷி 584 ‘டாப்–8’ இடத்தை விட்டு வெளியேறி, பைனல் வாய்ப்பை இழந்தனர். அடுத்து நடந்த பைனலில் அஞ்சும், இப்சென் மோதினர். இதில் அஞ்சும் 12–16 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இரண்டாவது வெள்ளி ஆண்கள் அணிகளுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுவ்ப்னில் குசாலே, தீபக் குமார், கோல்டி குர்ஜார் அடங...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக் | World No 1 Iga Swiatek Dominates Coco Gauff In Final To Win French Open
விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக் | World No 1 Iga Swiatek Dominates Coco Gauff In Final To Win French Open

பாரிஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் தனது இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன், 23வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனையான கோகோ காப் மோதினார். 18 வயதான, கோகோ காப் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கை எதிர்ப்பதில் தோல்விகண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக், முதல் செட்டை 6-1 என என கணக்கில் சுலபமாகவே கைப்பற்றினார். இரண்டாவது செட்டை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் போராடிய அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 3-6 என்ற கணக்கில் க...
ஜூன் 9-ல் திருமணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வழங்கிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் | nayanthara and vignesh shivan invites CM Stalin for marriage
சினிமா

ஜூன் 9-ல் திருமணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வழங்கிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் | nayanthara and vignesh shivan invites CM Stalin for marriage

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளனர் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும். இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ''தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்'' எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளி...
நார்வே செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன் தொடர்ந்து முன்னிலை!
விளையாட்டு

நார்வே செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன் தொடர்ந்து முன்னிலை!

நார்வே செஸ் போட்டியின் நான்காவது சுற்று முடிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் இணைந்து முதலிடத்தில் உள்ளனர். இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனந்த், நான்காவது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லே சோவை எதிர்கொண்டார். இதில் ஆனந்த் ஒரு புள்ளி மட்டுமே எடுத்தநிலையில், சோ ஒன்றரை புள்ளிகள் பெற்றார். எனினும் ஒட்டுமொத்தமாக 4 சுற்றுகளின் முடிவில் ஆனந்த் எட்டரை புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அனிஷ் கிரியை மூன்றுக்கு - பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்த நார்வேயின் மேக்னஸ் கார்லசனும் ஆனந்த்துடன் இணைந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM நன்றி!! மேலும் படிக்க ...
சாக் ஷி, திவ்யா, மான்சி ‘தங்கம்’ * சர்வதேச மல்யுத்தத்தில் அபாரம்
விளையாட்டு

சாக் ஷி, திவ்யா, மான்சி ‘தங்கம்’ * சர்வதேச மல்யுத்தத்தில் அபாரம்

அல்மாட்டி: கஜகஸ்தான் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாக் ஷி மாலிக், திவ்யா, மான்சி தங்கப்பதக்கம் கைப்பற்றினர். சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு சார்பில் கஜகஸ்தானில் தரவரிசை மல்யுத்த தொடர் நடக்கிறது. பெண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ போட்டிகள் நடந்தன. ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் சாக் ஷி மாலிக், 62 கிலோ பிரிவில் பங்கேற்றார். துவக்கத்தில் இருந்து அசத்திய சாக் ஷி, பைனலில் கஜகஸ்தானின் இரினா குஸ்னெட்சோவாவை சந்தித்தார். இதில் சாக் ஷி, 7–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 57 கிலோ பிரிவில் இந்தியாவின் மான்சி, பைனலில் கஜகஸ்தானின் எம்மா டிசினாவை 3–0 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். 68 கிலோ போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா காக்ரன், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றார். 76 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா, மங்கோலியாவின் ஜகர்டுமை சாய்...
Open chat