இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 141 ரன்னில் ஆல் அவுட்- 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 236/4
இங்கிலாந்துக்கு எதிரான முதக் டெஸ்டின் 2வது இன்னிங்சில் நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்துள்ளது.
லண்டன்:இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் காலின் டி கிராண்ட்ஹோம் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பாட்ஸ் தலா 4 விக்கெட்டும், பிராட், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ...