அட்லீ – ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் ‘ஜவான்’? | Atlee Bollywood debut with Shah Rukh Khan titled Jawan
இயக்குநர் அட்லீயுடன் ஷாருக்கான் இணையும் புதிய படத்திற்கு 'ஜவான்' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக இந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிரியாமணி, யோகிபாபு, உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
நயன்தாரா முதன்முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பெயரிடப்படாத இந...