Saturday, June 25

இலங்கை பிரதமர் ரணில் தன்னை ‘க்ருஷா’ கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பேசியது என்ன? சுவாரசிய கதை

Share

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், Ranil Wickremesinghe/FB

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார்.

அப்போது ‘ஹுணு வ(ட்)டயே’ எனும் நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களில் ஒன்றான ‘க்ருஷா’ (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து கொண்டு, தொங்கு பாலமொன்றை மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்வதைக் குறிப்பிட்டுக் கூறிய பிரதமர், “அதை விடவும் இது ஆபத்தான சவாலாகும்” என்று, தான் பொறுப்பேற்றுள்ள கடமையின் தன்மையினை உவமைகளுடன் விவரித்தார்.

இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரின் உரையில் சுட்டிக்காட்டிய ‘ஹுணு வ(ட்)டயே’ நாடகம் குறித்தும், அதில் வரும் ‘க்ருஷா’ எனும் பாத்திரம் தொடர்பிலும் அறிந்து கொள்ளும் ஆவல் பலரிடமும் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

இந்த சூழ்நிலையில் கல்வித் திணைக்கள அதிகாரியும், சமூக ஆர்வலரும் சிங்கள மொழிபெயர்ப்பாளருமான ஏ.எம். றிம்சான், தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்ட நாடகம் தொடர்பில் சில குறிப்புகளைப் பகிர்ந்திருந்தார். எனவே, அவை குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளும் அவரைத் தொடர்புகொண்டு பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.

நன்றி!! மேலும் படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat