Singer KK dies while singing in kolkata college | பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் காலமானார்
Singer KK Death: பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.பிரபல பாடகரான கேகே (53), தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் கடந்த 1968 ஆம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் வசித்து வந்த ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். இவர் திரைப்படங்களுக்கு பாடல் பாடுவதற்கு முன்பு 3500-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்களுக்கு பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தொடர்ந்து 1999 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பாடல் பாடியிருந்தார் கேகே. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் திரைப்பட பாடல்கள் பாடி வருகிறார்.
கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) சுமார் 66 பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழில் கேகே அறிமுகமான...